அமிழ்து: பெங்களூரில் வோல்வோ பேருந்து சேவை தொடக்கம்!!!பெங்களூரில் வோல்வோ பேருந்து சேவை தொடக்கம்!!!

பெங்களூர் நகர போகுவரத்து கழகம் 3 வோல்வோ பேருந்துகளை நகர போக்குவரத்திற்கு விட்டுள்ளது. பேருந்துகள் பார்ப்பதற்க்கு மிகவும் நன்றாகவுள்ளது.

இந்திய போக்குவரத்து வரலாற்றிலேயே முதன் முறையாக நகர போக்குவரத்திற்கு, வோல்வோ பேருந்துக்கள் சேவை துவங்கப்பட்டுள்ளது இங்கே தான்.

BMTC எனப்படும் பெங்களூர் நகர போகுவரத்து கழகம், பல அம்சங்களில் முன்னிலை வகிக்கிறது.

1. முக்கியமான இடங்களில் முன் பதிவு வசதி.
2. GPS எனப்படும், பேருந்து எங்கே சென்று கொண்டிருக்கிறது என அறியும் வசதி.
3. வகை வகையான அழகிய பேருந்துகள்

இன்னும் பல பல...

தற்பொழுது மகுடம் சூட்டியது போல வோல்வோ பேருந்து சேவை!!!
« Home | Next »
| Next »

0 Comments:

Post a Comment