அமிழ்து: August 2006அமிழ்து பெயர்க் காரணம்!

Friday, August 18, 2006
வலைப்பூ எழுத வெண்டும் என்ற நினைத்த மாத்திரத்திலேயே, மனதில் தோன்றிய பெயர் "அமிழ்து"!

பள்ளியில் படிக்கும் பொது நாம் சில செய்யுட்களை அர்த்தம் புரியுதோ இல்லையோ மனப்பாடம் செய்து தேர்வில் எழுத வேண்டி வரும்... ஆனால் பாவேந்தரின் இந்த அமிழ்து கவிதைப் படிப்பதற்க்கு மிகவும் எளிமையானது. யார் வேண்டுமானாலும் புரிந்துக் கொள்ளும் வகையில் இருக்கும்.

பொங்கல் அமிழ்து தான் பொய்யில்லை
கட்டிக் கறும்பு அமிழ்து
முல்லை அறும்பு அமிழ்து
தேன் அமிழ்து
தினை அமிழ்து
அப்பம் அமிழ்து
குழந்தைக் குதலை மொழி அமிழ்து

என்று கவிதை நீண்டு செல்லும். என்னவோ தெரியவில்லை, இக்கவிதை என் மனதில் "பச்சக்" என்று சொல்லுவார்களே அது போல் ஒட்டிக்கொண்டது. இப்பவும், சில சமயங்களில், இதனை நான் முணு முணுத்துக் கொண்டு இருப்பேன் என்னையும் அறியாமல்...

அமிழ்து என்று ஒரு முறை சொல்லிப் பார்த்தாலே, ஏதோ வாயில் தேன் ஊறியதைப் போல இருக்கிறது. அமிழ்து என்ற இப்பதம் பாவேந்தரின் கவிதயைப் படிப்பதற்க்கு முன்னமே எனக்கு அறிமுகம் ஆகியிருந்ததோ தெரியவில்லை, ஆனால் பாவேந்தரின் இவ்வார்த்தையைக் கையாண்டுள்ள விதம் அவ்வார்த்தையை நான் உச்சரிக்கும் போதே உணர வைக்கிறது.

மனதிலிருந்த அதுவே பெயராகிப் போனது.

NASDAQ கொண்டாடிய இந்திய சுதந்திர தினம்!

Thursday, August 17, 2006
இந்தியாவின் பொருளாதார ரீதியான எழுச்சியின் தாக்கத்தை இங்கே காண முடிகிறது.
நண்பர் ஒருவர் அனுப்பியிருந்த மெயிலிருந்து.

இலங்கையில் நெக்டொ அருந்தும் நாள் எப்பொழுது?!

Tuesday, August 15, 2006
இலங்கையில் குருதி ஆறு ஓடும் நிலையில் நான் இதை எழுதலாமா என்று தெரியவில்லை...

கனடாவில் சுற்றிக் கொண்டிருக்கும் போது நம்முடைய இலங்கைத் தமிழ் நண்பர் Scarborough ஏரியாவிற்கு அழைத்து சென்றிருந்தார்.
அங்கு பல தமிழ்க் கடைகளைக் காண முடிந்தது. தமிழில் பெயர் பலகைகள், தமிழ்ப் பதார்த்தங்கள் மற்றும் தமிழ்க் குரல்கள், மிகவும் இனிமையான அனுபவமாக இருந்தது. இலங்கைத் தமிழ்ச் சகோதரர்களுக்கு நன்றி! உலகின் எப்பகுதியிலும் தமிழ் ஒலிப்பது இவர்களால் தான் என்றால் மிகையாகாது.
ஒரு பேக்கரிக்குச் சென்று னெக்டொ என்ற பானத்தை வாங்கிக் கொடுத்தார், இது தான் இலங்கையில் விரும்பி அருந்தப்படும் பானமாம்! இது இலங்கையில் இருந்து இங்கு தருவிக்கப்படுகிறது போலும்! அந்த பாட்டிலின் படம் தான் இது!இவர்கள் இதனை இலங்கையிலேயே ஆசுவாசமாக பருகும் நாள் தான் என்று வருமோ!

சி தீவை இ நாட்டுன் இணைக்கலாமா?

சி தீவை இ நாட்டுன் இணைக்கலாமா? - இக்கதைக்கான உங்கள் கருத்து என்ன?
முன்குறிப்பு:இது எனது கற்பனையே!இதில் வரும் சம்பவங்கள் உண்மையைப் போலிருப்பின், அது படிப்பவரது பார்வையே ஒழிய, அதற்கு நான் பொறுப்பல்ல! :))முன்பொரு காலத்தில் இ நாடு என்று ஒரு நாடு இருந்து வந்தது. அதில் பல கோடி பேர் வசித்து வந்தனர். அவர்கள் பல மொழிகள் பேசி வாழ்ந்து வந்தனர். அவர்களுக்குள் சிறு சிற்ரு மனக் கசப்புகள் இருந்தாலும், அந்நாடு அமைதியாகத் தான் இருந்தது. ஒரு மொழியினையோ,ஒரு சமூகத்தையோ அடக்கி ஆளும் மனோபாவம் குறைந்தே காணப்பட்டது.ஆனால் அருகே இருக்கும் சி தீவிற்கு, இதில் எல்லாம் நம்பிக்கை இல்லைப் போலும். மொத்தமாக இரு பெரிய மொழியினரும், மற்றும் சில சமூகங்களும் வாழும் அந்த தீவில் பெரும்பான்மை மொழி பேசும் இனம் மற்றவரை அடக்கி ஒடுக்கப் பார்க்கிறது. அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகிறது. பலர் அகதிகளாக வேறு நாடுகளுக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், அடக்கி ஒடுக்கப்டும் இனம் பேஸும் மொழியும், இ நாட்டின் தென் பகுதியில் பேஸும் மொழியும் ஒன்றே. பல காலங்களுக்கு முன் இ நாட்டிலிருந்து புலம் பெயர்ந்திருக்கலாம் என்று பேசப்படுகிறது. அவர்கள் இ நாட்டிர்க்கும் வருவதுண்டு. அது தவிர வேரு பல நாடுகளிலும் அடைக்கலம் பெற்றனர்.இன்னொரு வேடிக்கை என்னவென்றால் பெரும்பான்மை மொழி பேசுபவரும் இ நாட்டிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் என்றும் அவற்கள் பேசி வரும் மொழியும் இ நாட்டின் சில மொழிகளைத் தழுவியதே என்றும் பேசப்பட்டது.சி தீவும் இ நாட்டின் உதவியைப் பல சமயங்களில் பெற்றுள்ளது, இராணுவ விசயத்திற்க்கும், மற்ற விசயங்களுக்கும்...இந்நிலையில் தான் ஒரு கேள்வி எழுகிறது, வரலாற்று பூர்வமாகவும், மொழி ரீதியாகவும் பல ஒற்றுமைகளை கொண்டுள்ள சி தீவு ஏன் இ நாட்டுடன் இணைந்து விடக் கூடாது.உங்கள் கருத்து இருந்தால் பதிவு செய்யவும்!

Infosys - இந்தியாவின் சொத்து?

Wednesday, August 02, 2006
சற்றே bore அடித்ததால், reception-ல் கிடந்த USA Today பத்திரிக்கையை எடுத்து வந்து படித்துக் கொண்டிருந்தேன்.

USA Today - வில் வந்திருந்த ஒரே ஒரு இந்தியச் செய்தி வந்திருந்தது. Infosys-இன் 25-ம் ஆண்டு கொண்டாடங்களை நான்கு கால கட்டுரையில் விவரித்திருந்தனர். எப்போது ஆரம்பிக்கப்பட்டது... நாராயணமூர்த்தி மற்றும் நந்தனின் சாதனைகள் விளக்கப்பட்டிருந்தன.
படிப்பதற்கே பெருமையாக இருந்தது...

IBM எப்படி அமெரிக்காவின் சொத்தாக பார்க்கப்படுகிறதோ அது போல இந்தியாவிலும் Infosys பார்க்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே தெரிகிறது.