அமிழ்து: September 2007



கட்டபொம்மன் கப்பம் கட்டத் தயாராயிருந்தாரா?

Sunday, September 02, 2007


கடந்த சனிக்கிழமை இரவு ஏழரை சுமாருக்கு மக்கள் தொலைக்காட்சிப் பார்க்க நேர்ந்தது. நிகழ்ச்சிப் பெயர் தெரியவில்லை. நிகழ்ச்சித் தொகுப்பாளர் பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மன் நினைவிடத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது, வார்த்தையின் ஊடாக, கட்டபொம்மன் கப்பம் கட்டத் தயாராகியே இராமநாதபுரம் சென்றதாகவும் ஆனால் அங்கு ஜாக்சன் துரையால் அவமானப்படுத்தப்பட்டதால் தான் போர் வெடித்ததாகவும் சொல்லிச் சென்றார்.

இதுவரை நான் படித்தது, படமாக பார்த்ததற்கு முற்றிலும் மாறாக, கிட்டத்தட்ட வீரப் பாண்டிய கட்டபொம்முவின் வீரத்திற்கே சந்தேகம் ஏற்படுத்தும் இந்த கருத்து உண்மையா?

தெரிந்தவர்கள் விளக்கலாமே...

Labels: ,