அமிழ்து: February 2006



அன்ன தானம் யாருக்கு?!!!

Monday, February 20, 2006


கடந்த சனிக்கிழமை மாலை, ஒரு கோவிலுக்கு சென்று இருந்தேன்.
வழக்கம் போல கூட்டம் அலை மோதியது. வட இந்தியரைப் போல இருந்த ஒரு பெரியவரும், அவரது மனைவி போல இருந்தவரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வெண் பொங்கல் வழங்கிக் கொண்டு இருந்தார்கள்.
சிறுவர், சிறுமியர் முண்டி அடித்து கொண்டு இருந்தார்கள், பெரியவர்களும் கூட.
இதில், கோவிலுக்கு பக்கத்தில் இருக்கும் சிறு குழந்தைகளும் பிரசாதம் வாங்க ஓடி வந்தன. அவர்களுக்கு இந்த பிரசாதம் இரவு உணவாகாவே பயன்படும் என்பது, அவர்கள் அணிந்திருந்த உடைகளிலும், பிரசாதம் வாங்க அவர்கள் செய்த பகீரத பிரயத்தனமுமே புலப்படுத்தியது.
ஆனால், அந்த வயது முதிர்ந்த கனவான் ஒரு தடவைக்கு மேலே வரக்கூடது என்று சொல்லி விரட்டி விட்டார். நல்ல வேலையாக ஒரு தடவை அனுமதித்தார்!!!
அதை பார்த்தபோது எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. பிரசாதமோ இல்லை அன்னதானமோ கொடுப்பது இல்லதவர்களுக்கு தானே தரப்பட வேண்டியது, அவர்கள் ஏன் தவிர்க்கப் படுகிறார்கள்!

Common Man திருச்சி வந்து விட்டார்!

Friday, February 10, 2006

புலி வருது புலி வருது கதையாக கடைசியில் வந்தே விட்டது. ஆமாம், ஏர் டெக்கான் தனது திருச்சி-சென்னை சேவையை பிப்ரவரி 2-ஆம் தேதி தொடங்கிவிட்டது.
48 பேர் அமரக்கூடிய வகையில் உள்ள ATR-42 வகை விமானம் தினமும் இயக்கப்படுகிறது.
சென்னையில் மதியம் 1:25 மணிக்கு கிளம்பி 2:25-ற்க்கு திருச்சியை அடைகிறது. எதிர் மார்க்கமாக 2:45-க்கு கிளம்பி 3:45-க்கு சென்னையை சென்றடைகிறது.
ஆக பயண நேரம் ஒரு மணி நேரமே!

படித்து கொண்டு இருக்கும் புத்தகஙள்

Tuesday, February 07, 2006

தற்பொழுது படித்து கொண்டு இருக்கும் புத்தகஙள்...
1. மூன்று விரல் - இரா. முருகன் கிழக்கு பதிப்பகத்தாரின் இந்த நாவல், மென் பொருள் துறையில் பணிபுரியும் ஒருவனுடைய கதை...!
2. அள்ள அள்ளப் பணம் - சோம. வள்ளியப்பன்
ஷேர் மார்க்கெட் பற்றியும், ம்யூட்சுவல் பன்ட்ஸ் பற்றியும் விரிவாக கூறுகிறார்.

எனது இந்த வருட குடியரசு தின அனுபவம்!


இந்த வருட குடியரசு தினமும் மற்றுமொரு நாளாக கடந்து போனது!
பள்ளிக் காலத்திற்க்கு பிறகு, குடியரசு தினம் என்பது, ஒரு விடுமுறை நாளாக தான் தெரிகிறது.
அன்றைய தினம், டெல்லியில் அணிவகுப்பு நிகழ்ச்சியை பார்க்கும் போது, மனதில் நெருடலாக இருந்தது.
தாய் நாட்டிற்க்காக பனி மலையிலும், பாலைவனத்திலும், விரிந்த கடற்பரப்பிலும், அல்லலுரும் வீரர்களை நினைக்கும் போதே மெய் சிலிர்க்கிறது.
இவை எல்லம் நினைத்தாலும், எப்பொதும் போல மதியம் சாப்பிட்டு, சாயங்காலம் தொலைக்காட்சி பார்த்து, இரவு தூங்கி விட்டேன்.. :((