அமிழ்து: அன்ன தானம் யாருக்கு?!!!



அன்ன தானம் யாருக்கு?!!!



கடந்த சனிக்கிழமை மாலை, ஒரு கோவிலுக்கு சென்று இருந்தேன்.
வழக்கம் போல கூட்டம் அலை மோதியது. வட இந்தியரைப் போல இருந்த ஒரு பெரியவரும், அவரது மனைவி போல இருந்தவரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வெண் பொங்கல் வழங்கிக் கொண்டு இருந்தார்கள்.
சிறுவர், சிறுமியர் முண்டி அடித்து கொண்டு இருந்தார்கள், பெரியவர்களும் கூட.
இதில், கோவிலுக்கு பக்கத்தில் இருக்கும் சிறு குழந்தைகளும் பிரசாதம் வாங்க ஓடி வந்தன. அவர்களுக்கு இந்த பிரசாதம் இரவு உணவாகாவே பயன்படும் என்பது, அவர்கள் அணிந்திருந்த உடைகளிலும், பிரசாதம் வாங்க அவர்கள் செய்த பகீரத பிரயத்தனமுமே புலப்படுத்தியது.
ஆனால், அந்த வயது முதிர்ந்த கனவான் ஒரு தடவைக்கு மேலே வரக்கூடது என்று சொல்லி விரட்டி விட்டார். நல்ல வேலையாக ஒரு தடவை அனுமதித்தார்!!!
அதை பார்த்தபோது எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. பிரசாதமோ இல்லை அன்னதானமோ கொடுப்பது இல்லதவர்களுக்கு தானே தரப்பட வேண்டியது, அவர்கள் ஏன் தவிர்க்கப் படுகிறார்கள்!
« Home | Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »

1 Comments:

At 11:09 PM, Blogger OmyKarshan said...

அன்னதானத்தை நிறுத்து வேண்டவே வேண்டாம் இருக்கறவன் சாப்பிடட்டும் இல்லாதவன் சாகட்டும்
சார் உங்க முன்னோர் இப்படி நினசுருந்தா நீங்க இப்ப இல்ல. நீங்க இப்படி சொல்ல என்ன காரணம் தெரியுமா
உங்க பொருளாதார முன்னேற்றம் ஒரு சராசரி வேளை சாப்பட்டுக்கு கஷ்டபட்ட ஒருவேளை இது பத்தி தெரியுமோ என்னமோ பசியில இருக்கறவனுக்கு தேவ ஒரு பிடி சோறு உங்க தத்துவ பேச்சு இல்ல
முடிஞ்சா போடுங்க முடிலய போயிருங்க எதுக்கு தேவ இல்லாம ஒரு கமெண்ட்
நாம படிக்கற வரை இத பத்தி எல்லாம் பேசவே மாட்டோம் என்னா நமக்கு போட்ட சோறே ஒரு 'subsidies' தான்

its very difficult to compare for everything with forien coutries
like Japan etc. can you able to live like Living together culture like US or UK.. mudiyathulla.. appa mattum parambariyam pesuveenga.
summa nadikatheenga sir..

This is one of the culture of India, whoever would like to change
"Aran Seiaa Virumbu" do it by our own. Dive in to the society
and do the change. just like giving comments in blogs wont change anything.
This is not to hurt anyone here. but if you want to change anything founded by Fore Fathers better you can migrate to Foriegn countries.

 

Post a Comment