அமிழ்து: April 2010



பெங்களூர் மாநகராட்சியில் தமிழர்கள்

Monday, April 05, 2010



ப்ரஹுத் பெங்களூரூ மஹாநகர பாலிக்கே எனப்படும் பெங்களூரூ மாநகராட்சிக்கு கடந்த வாரம் தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் வெளியாகிவிட்டன. 45% மக்களே தேர்தலின் மீதும், அரசியல்வாதிகளின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் போலும்.

கர்நாடகாவில், சமீப காலமாக எல்லா இடங்களிலும் பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டு வந்த தமிழர்களுக்கு, இந்த முறை மாநகராட்சித் தேர்தலில் பல கட்சிகளிலுமிருந்து தமிழர்களுக்கு வார்டு கவுன்சிலர் (கார்ப்பரேட்டர் இங்கே) பதவிக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தன. பி.ஜே.பி சார்பில் போட்டியிட்ட 15 பேரும், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 5 பேரும் தேர்தலில் வெற்றி வாகை சூடியுள்ளனர். இதன் மூலம் 198 உறுப்பினர்கள் உள்ள மாநகராட்சியில் 10% தமிழர்களாக அமைகின்றனர்.




திருவள்ளுவர், சர்வக்ஞர் சிலைகள் திறப்பு தமிழர் கன்னட ஒற்றுமையை அதிகரித்துள்ளது என்பதை ஒற்றுக்கொள்ளதான் வேன்டும். எடியூரப்பாவிற்கும் தமிழர்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது. அதனை அறுவடை செய்யும் விதமாக தமிழர்கள் வாக்கு வங்கி அதிகம் உள்ள இடங்களில் தமிழர்களை நிறுத்தி வெற்றிப் பெற்று விட்டார்கள், பி.ஜே.பி கட்சியினர்.




கர்நாடகாவில் தமிழர்கள் எண்ணிக்கை குறைவாகவே காட்டப்பட்டுள்ளது. இதற்கு காரணம் கடந்த மக்கட்தொகை கணக்கெடுப்பின் போது கூட தமிழர்கள், கடந்த காலங்களில் நடந்த கலவரங்களுக்கு பயந்து தாய்மொழி தமிழ் என்பதைக் கூட சொல்லவில்லை. இதனால் தமிழர்களின் மக்கட்தொகை உருது, தெலுங்கு பேசுபவர்களுக்கு அடுத்தே வருகிறது.


ஆனால் எஸ். எம். கிருஷ்ணா முதலமைச்சராக இருந்த காலத்தில், காவிரி பிரச்சினையின் போது மேல் முறையீட்டிற்காக சென்ற போது, முதலமைச்சாரலேயே பெங்களூரின் மக்கட்தொகையில் 30% தமிழர்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

மாநகராட்சி தேர்தலின் மூலம் தமிழர்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட்ட வேளையில் பெங்களூரூவில் வசிக்கும் தமிழர்கள் இந்த முறை தொடங்கியுள்ள மக்கட்தொகை கணக்கெடுப்பின் போது தாய் மொழி தமிழ் என்பதை மறக்காமல் குறிப்பிட வேண்டும்.

Labels: ,