அமிழ்து: October 2006



எனக்கு அது நடந்தே விட்டது!

Thursday, October 19, 2006
எது நடக்ககூடாது என்று இவ்வளவு நாள் நினைத்திருந்தேனோ அது இன்று நடந்தே விட்டது.

இவ்வளவு நாள் பொறுத்திருந்த எனக்கு இந்த வாரம் என்ன நடந்தது என்றே தெரியவில்லை நடந்து விட்டது.

கல்லூரியில் படிக்கும் போது நண்பர்கள் சென்ற போது கூட அவர்களின் கதையைக் கெட்டு கொண்டிருந்தேனே தவிற அப்படி ஒரு எண்ணம் எனக்கு தோன்றியதில்லை.

ஆனால், இன்று அறை நண்பர் கூப்பிட்டவுடன் நானும் வரேன் என்று கிளம்பி விட்டேன். எங்கிருந்து எனக்கு தைரியம் வந்தது எனத் தெரியவில்லை

பணம் எல்லாம் அவர் ஏற்கனவே விசாரித்து விட்டார். போக வேண்டியது தான் பாக்கி.

நண்பர் தான் தைரியம் சொல்லிக் கூட்டிச் சென்றார். அவருக்கும் இதில் எல்லாம் அனுபவம் இல்லை என்றாலும் நான் சற்றே பயந்தது கண்டு அவர் கெத்தாக தைரியம் சொல்லி கொண்டிருந்தார்.

இடமும் வந்துவிட்டது. இப்பவும் கூட நான் ஒரு முறைக் என்னைக் கேட்டுக் கொண்டேன் "இது எல்லாம் உனக்கு தேவை தானா என்று"


இவ்வளவு தூரம் வந்து விட்டோம் இனி வேண்டாம் என்று சொன்னால் நண்பரின் கேலிப் பார்வைக்கு ஆளாக நேரிடும். அதுவுமில்லாமல், மற்ற அறை நண்பர்களிடமும் சொல்லி விடுவார்... அப்புறம் கைப்புள்ள ரேஞ்சுக்கு முழிக்க வேண்டிட்யது தான் சபையில... பின் விளைவுகளை யோசித்து விட்டு பின் வாங்கக்கூடாது என முன்னோக்கி சென்றேன்.

கடவுள்(!!!) மேல் பாரத்தைப் போட்டு, அந்த சந்தில் நுழைந்தே விட்டோம். நண்பர் ஏதோ லட்சியத்தோடே இருந்த மாதிரி தோணியது. எதைப் பற்றியும் கவலைப்பட்டவராக தெரியவில்லை.

முதல் மாடியில் தான் அது இருந்தது. படி ஏறும் போதே பாட்டுச் சத்தம் கேட்டது.

மெல்ல மெல்ல இருவரும் முன்னேறி இடத்தை அடைந்தே விட்டோம்.

மழைக்குக்கூட ஜிம் பக்கம் ஒதுங்காத நான் இன்று உள்ளே நிற்கிறேன்.

ஆயுதங்கள் எல்லாம் புதுசா தெரிந்தது. மாஸ்டரை பார்த்தவுடன் கோயில் பட வடிவேலு ஞாபகம் வந்தார்.

மாஸ்டர் டிப்ஸ் எடு என்றார்... அது என்ன டிப்ஸ் என்று புரியாமல், தெரிஞ்சது மாதிரி நான் எதையோ பண்ண அருகில் நின்றவர்களின் "கொள்" சிரிப்பிற்க்கும் ஆளாக நேர்ந்தது.

இப்படியான எனது ஜிம் அனுபவம் தொய்வில்லாமல் 3-4 நாட்கள் ஓடிவிட்டது. எவ்வளவு நாள் தான் வலிக்காத மாதிரி நடிக்கிறதனு பார்ப்போம். :)