அமிழ்து: February 2007பஸ் எங்க இருக்கு?

Thursday, February 22, 2007பெங்களூர் மாநகர பேருந்து சமீப காலமாக பல முன்னோடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது... வோல்வோ பேருந்து சேவையைத் தொடர்ந்து, வோல்வோ பஸ் எங்கு வந்து கொண்டிருக்கிறது என்று அறிய குறுஞ்செய்தி (SMS) அனுப்பினால் போதும், பஸ் இருக்கும் இடம் தெரிந்து விடும். அதற்கு தகுந்த மாதிரி நமது பயணத்தை அமைத்துக் கொள்ளலாம்!
மேலதிக தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்... http://www.clinf.com/yi/

Labels: ,

கர்நாடக பந்தும் சில காதல் கவிதை/கட்டுரை-களும்!

Monday, February 12, 2007

முழு வேலை நிறுத்ததால் 3 நாட்களான விடுமுறையின் எச்சத்தில் இருந்த போது மிகவும் bore ஆகி தேன்கூடை மேய்ந்துக்கொண்டிருந்தேன்..
காதலர் தின பதிவுகளைப் பார்த்த போது சட்டென நானும் ஏதாவது எழுத வேண்டும் என்று தோன்றியது.

நான் எழுதியதை எந்த வகையில் சேர்ப்பது என்று தெரியவில்லை...இதைக் கவிதையாகப் பாடுவதோ கட்டுரையாக பாவிப்பதோ வாசிப்பவரின் கற்பனா சக்தியைப் பொருத்தது!இவையனைத்தும் என் சொந்த அனுபவம் இல்லை... :)

என் ஒரு தலைக் காதலிகளே
ஒரு முறையாவது சொல்லுங்கள்
நான் உங்களால் காதலிக்கப்பட்டிருந்தால்!

என்னுடைய காதல் யாருக்கும் தெரியாது...
என் காதலி உட்பட!

காதலைத் தெரியப்படுத்தாதீர்கள்...
சில நேரங்களில் தெரியப்படுத்தாத காதல்கள் தான் நிறைவேறுகிறது...
மனதளவிலாவது!

உன்னிடம் பேச ஒப்பனை செய்யப்பட்ட வார்த்தைகள்
பார்த்தவுடன் கலைக்கிறது வேடத்தை!

உன் வீட்டு ரோஜா சிரிக்கிறது தினமும்
வியப்பில்லை தான்
உன் தரிசனம் கிடைக்கிறதே!

இனியாவது என்னிடம் சொல்லிவிட்டு போ
நீ எங்கு செல்கிறாய் என்று...
உன் பூந்தொட்டிக்களுக்குப் பதில் சொல்லி மாளவில்லை என்னால்!

உன் வீட்டுத் தாழ்ப்பாளுக்கு எண்ணெயிடாதே...
பின், உன் வரவை யார் அறிவிப்பது?!

தமிழரில்லாத இடத்திலும் தமிழ்க்குரல்!

Friday, February 09, 2007
ஆம்! என்னுடன் பணி புரியும் இருவர் தமிழில் தான் பேசிக் கொள்கின்றனர். இதில் என்ன அதிசயம் என்று நினைத்தால் ஒருவர் மலையாளி, ஒருவர் கன்னடர்... அவர்களை இணைப்பது நம் தமிழ்! ஆம் இருவருக்கும் நன்றாக தமிழ் தெரியும்!

தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்பதற்கினங்க!!!