அமிழ்து: April 2006எங்க பிரச்சனையும் கொஞ்சம் கவனிங்க...!

Saturday, April 22, 2006
யாரு முதலா ஆரம்ப்பிச்சு வச்சானு தெரியல, தமிழ் நாட்டு மக்களுக்கு எல்லா பிரச்சனையும் தீர்ந்த மாதிரியும், சன் டிவி ஒண்ணு தான் அவங்களுக்கு பெரும் பிரச்சனை மாதிரியும் ஆளாளுக்கு சன் டிவிய தான்பா டார்கெட் பன்றாங்கோ...!
ஒரு கட்சி தலிவரு சன் டிவில முகம் காண்பிக்கலேனு கோபப்பட்டு எகிறி ஓடிட்டாரு...!
இன்னொரு நடிகரு குடும்ப அரசியலுன்னு சொல்லி போட்டு அந்த குடும்ப டிவில ப்ரொக்ரம் பண்ணிக்கிட்டு இருக்காரு...இன்னமும்...
பத்தாதுக்கு தமிழ் முரசு, தினகரன் வேற... இதனால பாவம் அடி வாங்கின பத்திரிக்கைங்களோட ஜால்ரா சத்தம் வேர ஓவரா இருக்குது....!
அய்யா தலைவருங்களா, பத்திரிக்ககாரங்களே, எங்களுக்கு டிவி, பேப்பர் தாண்டி எவ்வளவோ இருக்கு...
கொஞ்சம் அதையும் பேசுங்க, எழுதுங்க உங்க ஜால்ராக்களுக்கும் விளம்பரஙளுக்கும் மத்தியிலே...