அமிழ்து: May 2007காதல்!

Thursday, May 17, 2007


நிலவுக் கவிதை வேண்டுமென்றாய்
உன் பெயரைச் சொன்னால்
தாமரையாகிறாயே?!

எல்லோர் விடியலுக்கும் சூரியன்
எனக்கு மட்டும் ஏன் நிலா?!

தூங்கியிருக்கவே ஆவலுருகிறேன்
கனவுகளில் தானே பேசுகிறாய்!

சித்திரை வெயிலில் வெளியே வராதே
சிலர் கோடையில் வசந்தம் - என
புகார் வாசிக்கக்கூடும்!

இரவும் பகலும்
ஒன்று தான் - என்
நினைவுகளெல்லாம்
உன்னோடிருப்பதால்

Labels: , ,

ராத்திரி முடி வெட்டிக்கலாமா?

Tuesday, May 15, 2007சின்ன வயசிலிருந்தே ராத்திரி முடி வெட்டாத, முடி வெட்டாதனு அம்மா சொல்லுவாங்க... அம்மா, அப்பா கூட இருந்த வரைக்கும் அதையெல்லாம் கேட்டுக்கிட்டுத் தான் இருந்தேன்... இங்க பெங்களூர் வந்தோன அதெல்லாம் மறந்திருச்சு...

இங்க நம்ப ஏரியால பர்கூர்காரர் ஒருத்தர் சலூன் வச்சிருக்கார். அவருக்கிட்ட தான் வெட்டறது. நம்ப பர்கூர்காரர் என்ன பண்ணுவாருன்னா, கடையத் தாண்டிப் போனா விட மாட்டாரு... ஒரு ராயல் சல்யூட் போட்டு நமக்கு ராணுவ மரியாதை ரேஞ்சுக்கு செஞ்சு அனுப்பி வைப்பாரு...


இப்படி தான் "office" முடிச்சிட்டு வீட்டுக்கு வந்த நான் நாளைக்கு முடி வெட்டனும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்... மணி ஏழரைப் போன ஆனதால சரி சாப்பிட போலாம்னு போய்ட்டு திரும்பி வந்துக்கிட்டுருந்தோம்... இடையில நம்ப பர்கூர்காரர் வழக்கமான மரியாதை செய்ய... நான் கடையப் பார்க்க... கும்பல் வேற இல்ல... நமக்கு தான் சனி வெத்தல பாக்கு போட்டு அழைக்குமே... நமக்கு இதெல்லாம் தெரியல... ஆகா காலியாயிருக்குனு டக்குனு உள்ள நுழைச்சிட்டேன்... அப்பக் கூட அம்மா சொல்றது ஒரு தடவ mildaa ஞாபகம் வந்துச்சு... இருந்தாலும் "ரன்" பட விவேக் ரேஞ்சுக்கு ஒரு "style"லா உள்ள போனேன்.


நமக்கு "hair style" எல்லாம் ஒன்னும் தெரியாது. எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து ஒரே "style"-லில தான் முடி வெட்டிக்கிட்டு இருக்கேன்...
"ரொம்ப ஒட்ட வெட்டுங்கனு" (இது தான் நம்ப style) சொல்லிட்டு ஏறி உக்காந்தாச்சு. அவரும் மெஷின எடுத்து ஆரம்பிச்சுட்டாரு... சரி ஒரு குட்டித் தூக்கம் போடலாம்னு அப்படி கண்ணு சொக்க உக்காந்திருந்தேன்... சாப்பிட நம்பளோட கூட வந்த நண்பர் துணைக்கு உக்காந்திருந்தாரு... பல வருசத்துக்கப்புறம் முடி வெட்ட என் கூட துணைக்கு வந்திருந்தத நினைச்சுக்கிட்டேன்..கண்ணாடில அவரப் பார்த்தோன எனக்கு சிரிப்பு வந்திருச்சு... "தலை" 2 நாளைக்கு முன்னாடி தான் திருப்பதி போய்ட்டு "மொழு மொழு"னு வந்திருந்துச்சு... "இரும்பு அடிக்கிற இடத்தில "ஈ"க்கென்ன வேலை"ங்கற மாதிரி தோணுச்சு.


வேலை நடக்கும் போதே குசலம் விசாரித்து, ஊர்க்கதை எல்லாம் பேசிக்கிட்டு இருந்தப்ப தான் அது நடந்துச்சு... கையில வைச்சிருந்த மெஷினிலிருந்து டப்புனு சத்தம் வந்துச்சு... அவ்வளவு தான் நமக்கு பயம் ஆகிப்போச்சு... மூளைனு இருந்த கொஞ்ச நஞ்சமும் வெளிய வந்திருச்சோனு... நல்ல வேளை அப்படி எதுவும் நடக்கலைனு சந்தோஷப்பட்டப்பதான் உரைச்சது பவர் கட்டாயிருச்சுனு... இருட்டுல அந்த போர்வையோட உக்காந்திருந்தேன்... இப்ப தான் நமக்கு ஒரிஜனல் ஏழரை ஆரம்பிச்சிச்சு... கடையில ஜெனரேட்டரும் இல்ல... கடைப் பையன் மெழுகுவர்த்தி ஏத்த... அரைகுறையா இருந்த தலைய சரி பண்ணிருவாருன்ற நம்பிக்கையில இருந்தேன்.


வெளிச்சம் தெரியலைனு பையன என் தலைக்கு நேர மெழுகுவத்தியப் பிடிக்க சொன்னாரு... இவரோட ரெண்டு கைக்கு நடுவுல அந்த பையனோட மெழுகுவர்த்திக் கைய வச்சுக்கிட்டாரு... சரி இன்னைக்கு கடைசி ராணுவ மரியாதை தான்னு தோணிச்சு. இவரு முடி வெட்ட நகர்த்த நகர்த்த அவன் கையையும் நகர்த்தனும். நானும் தலைய தூக்க முடியல... தூக்கினா மெழுகு சூடு தான்... மூணுப் பேத்துல யாருக்கும் எது நடந்தாலும் என் தலையில தான் விடியும் இல்ல விழுங்கிற கயத்தில நடக்கிற situation... பையனுக்கு வேற செம திட்டு... இங்க புடி அங்க புடின்னு... போற போக்கில அவன் என் தலையில் போட்டுட்டு ஓடிடுவானோனு பயமா இருந்துச்சு... எப்படா மேல போட்டிருக்க போர்வைய எடுப்பாரு வீட்டுக்கு போலாம்னு இருந்தேன்... ஆ சொல்லிட்டாரு... தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்னு ஓட்டமும் நடையுமா வீடு வந்து சேர்ந்தேன்...


இப்ப புரியுது எதுக்கு ராத்திரி முடி வெட்டக்கூடாதுனு! :(

Labels: , ,

இந்தியாவில் இல்லாத "racism மா"?

Wednesday, May 09, 2007


சில வாரங்களுக்கு முன் ஜேட் - சில்பா ஷெட்டி விவகாரம் இந்தியாவில் பெரிதாகப் பேசப்பட்டது. மீடியாக்களும் மாய்ந்து மாய்ந்து செய்தியாக்கிக் கொண்டிருந்தது. இந்தியாவில் ஏதோ எல்லோரும் சமமாக பார்க்கப்படுவது போலவும், இந்த ஜேட் சொன்னதால் எல்லாம் போனது போலவும் மாயையை உருவாக்கினார்.சற்றே யோசித்துப் பாருங்கள்...! இந்தியா வேற்றுமையில் ஒற்றுமைக் காணும் தேசம் தான்! ஆனால் நாம் எல்லோரும் சக மனிதனால் மனிதனாகப் பார்க்கப்படுகிறோமா?! ஒற்றுமையை விட வேற்றுமயைத் தெரிந்து தூற்றுவதில் தான் ஆர்வமாய் இருக்கிறோம்.ஆரிய - திராவிட பஜனை... சரி திராவிடன் தான் என்றால் தமிழனா, தெலுங்கனா, மலையாளியா, கன்னடனா என்றப் பார்வை... சரி தமிழன் தான் என்றால் இவன் மூதாதையரும் தமிழன் தானா என்ற ஆராய்ச்சி... சரிப்பா தமிழன் தான் என்றால் மதம் முன்னே வருகிறது... பின்னாடியே ஜாதியும், பிரிவுகளும் வந்துவிடுகிறது...இப்படி நம்மிடமே ஆயிரத்தெட்டிருக்கும் போது நாம் ஜேட் கூடிக்களைத் திட்டிக் கொண்டிருப்பது சரிதானா?


Labels: ,

சொல்ல மறந்த காதல் கவிதைகள்!

Thursday, May 03, 2007

உலகம் தட்டை என்றனர்,
உருண்டை என்கின்றனர்
என்னைக் கேட்டால் சொல்லியிருப்பேன்
உலகமே நீ தானென்று!


நீயில்லை என்றால்-எனக்கு
ஊர்வலச் சாலையும்
வெறிச்சோடுகிறது!


தேர் வருகிறதென ஊரோடு
நீயும் வருவது - உனக்கே சரிதானா?!


என் தூக்கம் கெடுக்க
சூரியானலும் முடியாத போது
உன்னால் எப்படி?


பூக்களும் அழகு தான் - நீ
சிரிக்கும் முன் வரை!

Labels: , ,