அமிழ்து: இந்தியாவில் இல்லாத "racism மா"?



இந்தியாவில் இல்லாத "racism மா"?



சில வாரங்களுக்கு முன் ஜேட் - சில்பா ஷெட்டி விவகாரம் இந்தியாவில் பெரிதாகப் பேசப்பட்டது. மீடியாக்களும் மாய்ந்து மாய்ந்து செய்தியாக்கிக் கொண்டிருந்தது. இந்தியாவில் ஏதோ எல்லோரும் சமமாக பார்க்கப்படுவது போலவும், இந்த ஜேட் சொன்னதால் எல்லாம் போனது போலவும் மாயையை உருவாக்கினார்.



சற்றே யோசித்துப் பாருங்கள்...! இந்தியா வேற்றுமையில் ஒற்றுமைக் காணும் தேசம் தான்! ஆனால் நாம் எல்லோரும் சக மனிதனால் மனிதனாகப் பார்க்கப்படுகிறோமா?! ஒற்றுமையை விட வேற்றுமயைத் தெரிந்து தூற்றுவதில் தான் ஆர்வமாய் இருக்கிறோம்.



ஆரிய - திராவிட பஜனை... சரி திராவிடன் தான் என்றால் தமிழனா, தெலுங்கனா, மலையாளியா, கன்னடனா என்றப் பார்வை... சரி தமிழன் தான் என்றால் இவன் மூதாதையரும் தமிழன் தானா என்ற ஆராய்ச்சி... சரிப்பா தமிழன் தான் என்றால் மதம் முன்னே வருகிறது... பின்னாடியே ஜாதியும், பிரிவுகளும் வந்துவிடுகிறது...



இப்படி நம்மிடமே ஆயிரத்தெட்டிருக்கும் போது நாம் ஜேட் கூடிக்களைத் திட்டிக் கொண்டிருப்பது சரிதானா?


Labels: ,

« Home | Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »

0 Comments:

Post a Comment