அமிழ்து: "பம்மல்" - திருக்குறள் - அதிகாரம்"பம்மல்" - திருக்குறள் - அதிகாரம்


"பம்மல்"
பம்மல் என்பது வாழ்க்கையில் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. பம்மல் ஊரைக் குறிப்பிடவில்லை. பம்மல் என்ற செயலைக் குறிக்கிறேன்.


வாழ்க்கையில் ஒரு முறையாவது ஒருவர் மற்றவரிடம் பம்ம வேண்டியதாயிருக்கிறது. பம்மல் என்பது மாணவர் ஆசிரியிரிடம், குழந்தைகள் பெரியவர்களிடம், பிள்ளைகள் பெற்றோர்களிடம்,இன்டர்வியுவில் கேள்வி கேட்பவரிடம், அலுவலகத்தில் மேனேஜரிடம் என பம்மல் அங்கங்கு தேவைப்படுகிறது. மிக முக்கியமாக தலைவர்களிடம், அடுத்த கட்ட தலைவர்கள்... நமது காலத்திலேயே பம்மலால் முதலமைச்சாராக முன்னேறியவரைக் கூட பார்த்திருக்கிறோம்...
பல சமயம் காரிய சித்திக்காவும், சில சமயம் மரியாதை நிமித்தமாகவும் தேவைப்படுகிறது.

பம்மல், பல நேரங்களில் ஒரு மனிதனின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கிறதென்றால் அது மிகையல்ல. ஒரு அலுவலகத்தில் இருவர் ஒரே வகையான தகுதியைப் பெற்றிருக்கும் போது பம்மலே அவர்களின் முன்னேற்றத்தைத் தீர்மானிக்கிறது.
இவ்வாறு வாழ்க்கையில் இன்றியமையாததாகி விட்ட பம்மல் பற்றி வரலாற்றிலும் சரி இலக்கியத்திலும் சரியான இடம் பெற்றிராமலிருப்பது சற்று வருந்ததக்கதே! திருவள்ளுவரின் வழியில் பம்மலுக்கு ஒரு அதிகாரம் படைத்திருக்கிறேன்... இது எதிர் கால சந்ததியினருக்கும் பயனுள்ளதாக அமையும் என்பது திண்ணம்!

பம்மல் பற்றிய சில வெற்றிக் குறிப்புகள்....
பம்மலின் வெற்றியே அது பம்மப்படுபவர் அதனைப் பற்றி அறியாமல் இருக்கும் போது தான் அமைகிறது.

நான் பம்மும் போது எதிராளியும் பம்மினால், அவரை விட நமது பம்மலே உயர்ந்தாக இருக்குமாறு நாம் பம்ம வேண்டும்.

சில குறள்களை நான் இங்கே தந்துள்ளேன்...

பம்மல் - அதிகாரம்

பம்முக பம்மல் அப்பம்மல் - நற்பம்மல்
பிறிதோர்க்கு தெரியா திருக்க

பம்மலின் பம்மாமை நன்று - அப்பம்மல்
எல்லோர்க்கும் தெற்றென தெரிய
பம்மல் செய்தாரை ஒருத்தல் - அவர்நாண
அவரிடமே பம்மி விடல்
பம்முக பம்மல் அப்பம்மல் - பிறிதோர்பம்மல்
வெல்லும் இன்மை யறிந்து
எண்ணித் துணிக பம்மல் - துணிந்தபின்
எண்ணுவம் என்ப திழுக்கு
« Home | Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »

3 Comments:

At 11:28 AM, Blogger மு.கார்த்திகேயன் said...

/பம்முக பம்மல் அப்பம்மல் - நற்பம்மல்
பிறிதோர்க்கு தெரியா திருக்க //


யாருக்கும் தெரியாத மாதிரி பம்ம சொல்றீங்க.. அதுக்கு ஊருக்கே தெரிஞ்ச ஒரு பம்முதலை பற்றிய புகைப் படத்தை போட்டு இருக்கீங்க..

சரியான டைமிங் அமிழ்து

 
At 11:29 AM, Blogger மு.கார்த்திகேயன் said...

//எண்ணித் துணிக பம்மல் - துணிந்தபின்எண்ணுவம் என்ப திழுக்கு //

இதெல்லாம் திரு ஐயா எழுதினது தான.. வேற குறள்களோட சாயல் இருக்கே :-)

 
At 9:27 PM, Blogger அமிழ்து said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கார்த்தி!

//யாருக்கும் தெரியாத மாதிரி பம்ம சொல்றீங்க.. அதுக்கு ஊருக்கே தெரிஞ்ச ஒரு பம்முதலை பற்றிய புகைப் படத்தை போட்டு இருக்கீங்க..

சரியான டைமிங் அமிழ்து//

ஆம், எப்படி பம்மக் கூடாது என்பதற்கு இது ஒரு எ.கா. ஊரறிய பம்மிய கலைராஜன் அம்மாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார் என்கிறது இந்த வார ஜு.வி. ... :)


//இதெல்லாம் திரு ஐயா எழுதினது தான.. //
"எண்ணித் துணிக" எழுதும் போது நானும் அதையே தான் யோசித்தேன்... ஆனால், ஒரு கணக்காக 5 வர வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதி விட்டேன்... :))

 

Post a Comment