அமிழ்து: அமிழ்து பெயர்க் காரணம்!



அமிழ்து பெயர்க் காரணம்!

வலைப்பூ எழுத வெண்டும் என்ற நினைத்த மாத்திரத்திலேயே, மனதில் தோன்றிய பெயர் "அமிழ்து"!

பள்ளியில் படிக்கும் பொது நாம் சில செய்யுட்களை அர்த்தம் புரியுதோ இல்லையோ மனப்பாடம் செய்து தேர்வில் எழுத வேண்டி வரும்... ஆனால் பாவேந்தரின் இந்த அமிழ்து கவிதைப் படிப்பதற்க்கு மிகவும் எளிமையானது. யார் வேண்டுமானாலும் புரிந்துக் கொள்ளும் வகையில் இருக்கும்.

பொங்கல் அமிழ்து தான் பொய்யில்லை
கட்டிக் கறும்பு அமிழ்து
முல்லை அறும்பு அமிழ்து
தேன் அமிழ்து
தினை அமிழ்து
அப்பம் அமிழ்து
குழந்தைக் குதலை மொழி அமிழ்து

என்று கவிதை நீண்டு செல்லும். என்னவோ தெரியவில்லை, இக்கவிதை என் மனதில் "பச்சக்" என்று சொல்லுவார்களே அது போல் ஒட்டிக்கொண்டது. இப்பவும், சில சமயங்களில், இதனை நான் முணு முணுத்துக் கொண்டு இருப்பேன் என்னையும் அறியாமல்...

அமிழ்து என்று ஒரு முறை சொல்லிப் பார்த்தாலே, ஏதோ வாயில் தேன் ஊறியதைப் போல இருக்கிறது. அமிழ்து என்ற இப்பதம் பாவேந்தரின் கவிதயைப் படிப்பதற்க்கு முன்னமே எனக்கு அறிமுகம் ஆகியிருந்ததோ தெரியவில்லை, ஆனால் பாவேந்தரின் இவ்வார்த்தையைக் கையாண்டுள்ள விதம் அவ்வார்த்தையை நான் உச்சரிக்கும் போதே உணர வைக்கிறது.

மனதிலிருந்த அதுவே பெயராகிப் போனது.
« Home | Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »

3 Comments:

At 3:46 PM, Blogger AZZAI. COM said...

Hi! greeting from Do'man. I invite you to visit my blog too…

 
At 12:59 AM, Blogger பரத் said...

நல்ல பதிவு

நானும் முன்பே உங்களின் பதிவுகளைப் படித்திருக்கிறேன்.
தொடர்ந்து எழுதுங்கள்
வருகைக்கு நன்றி

 
At 6:44 PM, Blogger நாமக்கல் சிபி said...

பெயர்க்காரணமும் அமிழ்து!

:))

 

Post a Comment