அமிழ்து: இலங்கையில் நெக்டொ அருந்தும் நாள் எப்பொழுது?!இலங்கையில் நெக்டொ அருந்தும் நாள் எப்பொழுது?!

இலங்கையில் குருதி ஆறு ஓடும் நிலையில் நான் இதை எழுதலாமா என்று தெரியவில்லை...

கனடாவில் சுற்றிக் கொண்டிருக்கும் போது நம்முடைய இலங்கைத் தமிழ் நண்பர் Scarborough ஏரியாவிற்கு அழைத்து சென்றிருந்தார்.
அங்கு பல தமிழ்க் கடைகளைக் காண முடிந்தது. தமிழில் பெயர் பலகைகள், தமிழ்ப் பதார்த்தங்கள் மற்றும் தமிழ்க் குரல்கள், மிகவும் இனிமையான அனுபவமாக இருந்தது. இலங்கைத் தமிழ்ச் சகோதரர்களுக்கு நன்றி! உலகின் எப்பகுதியிலும் தமிழ் ஒலிப்பது இவர்களால் தான் என்றால் மிகையாகாது.
ஒரு பேக்கரிக்குச் சென்று னெக்டொ என்ற பானத்தை வாங்கிக் கொடுத்தார், இது தான் இலங்கையில் விரும்பி அருந்தப்படும் பானமாம்! இது இலங்கையில் இருந்து இங்கு தருவிக்கப்படுகிறது போலும்! அந்த பாட்டிலின் படம் தான் இது!இவர்கள் இதனை இலங்கையிலேயே ஆசுவாசமாக பருகும் நாள் தான் என்று வருமோ!
« Home | Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »

0 Comments:

Post a Comment