அமிழ்து: சி தீவை இ நாட்டுன் இணைக்கலாமா?



சி தீவை இ நாட்டுன் இணைக்கலாமா?

சி தீவை இ நாட்டுன் இணைக்கலாமா? - இக்கதைக்கான உங்கள் கருத்து என்ன?
முன்குறிப்பு:இது எனது கற்பனையே!இதில் வரும் சம்பவங்கள் உண்மையைப் போலிருப்பின், அது படிப்பவரது பார்வையே ஒழிய, அதற்கு நான் பொறுப்பல்ல! :))முன்பொரு காலத்தில் இ நாடு என்று ஒரு நாடு இருந்து வந்தது. அதில் பல கோடி பேர் வசித்து வந்தனர். அவர்கள் பல மொழிகள் பேசி வாழ்ந்து வந்தனர். அவர்களுக்குள் சிறு சிற்ரு மனக் கசப்புகள் இருந்தாலும், அந்நாடு அமைதியாகத் தான் இருந்தது. ஒரு மொழியினையோ,ஒரு சமூகத்தையோ அடக்கி ஆளும் மனோபாவம் குறைந்தே காணப்பட்டது.ஆனால் அருகே இருக்கும் சி தீவிற்கு, இதில் எல்லாம் நம்பிக்கை இல்லைப் போலும். மொத்தமாக இரு பெரிய மொழியினரும், மற்றும் சில சமூகங்களும் வாழும் அந்த தீவில் பெரும்பான்மை மொழி பேசும் இனம் மற்றவரை அடக்கி ஒடுக்கப் பார்க்கிறது. அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகிறது. பலர் அகதிகளாக வேறு நாடுகளுக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், அடக்கி ஒடுக்கப்டும் இனம் பேஸும் மொழியும், இ நாட்டின் தென் பகுதியில் பேஸும் மொழியும் ஒன்றே. பல காலங்களுக்கு முன் இ நாட்டிலிருந்து புலம் பெயர்ந்திருக்கலாம் என்று பேசப்படுகிறது. அவர்கள் இ நாட்டிர்க்கும் வருவதுண்டு. அது தவிர வேரு பல நாடுகளிலும் அடைக்கலம் பெற்றனர்.இன்னொரு வேடிக்கை என்னவென்றால் பெரும்பான்மை மொழி பேசுபவரும் இ நாட்டிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் என்றும் அவற்கள் பேசி வரும் மொழியும் இ நாட்டின் சில மொழிகளைத் தழுவியதே என்றும் பேசப்பட்டது.சி தீவும் இ நாட்டின் உதவியைப் பல சமயங்களில் பெற்றுள்ளது, இராணுவ விசயத்திற்க்கும், மற்ற விசயங்களுக்கும்...இந்நிலையில் தான் ஒரு கேள்வி எழுகிறது, வரலாற்று பூர்வமாகவும், மொழி ரீதியாகவும் பல ஒற்றுமைகளை கொண்டுள்ள சி தீவு ஏன் இ நாட்டுடன் இணைந்து விடக் கூடாது.உங்கள் கருத்து இருந்தால் பதிவு செய்யவும்!
« Home | Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »

1 Comments:

At 12:39 PM, Anonymous Anonymous said...

நிச்சயமாக நல்ல காரியம்.

ஏராளமான பிரச்னைகள் இதனால் தீரும்.

ஆனால், நல்லெண்ணத்தை யாரும் புரிந்துகொள்ளமாட்டார்கள்

சி காரர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். சி காரர்கள் ஒப்புக்கொண்டாலும், பு காரர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். ப வாதம் ஏதோ சி ஏரியாவுக்குள் இப்போது இருக்கிறது. பு காரர்களி ப வாதத்தை நிறுத்தாமல் சியை இக்குள் இணைத்தால், வேலியில் போற ஓணானை எடுத்து இடுப்பில் விட்டுக்கொள்ளும் கதைதான்.

 

Post a Comment