அமிழ்து: பஹ்ரைனில் 16 தமிழர் மரணம்!பஹ்ரைனில் 16 தமிழர் மரணம்!

இந்த செய்தியைக் கேட்டவுடன் முதலில் கண்களில் நீர் தான் வந்தது. நான் சென்னை விமான நிலையத்தில் ஃப்ரான்க்ஃப்ர்ட் விமானத்திற்கு காத்திருந்த வேளையில், தமிழகத்தின் பல்வேறு கிராமங்களிலிருந்து வந்திருந்த பலர் சிங்கப்பூர் விமானதிற்க்கும், வளைகுடா விமானங்களுக்கும் காத்திருந்தனர். சிலர் மஞ்சள் பையும், சிலர் ஜவுளிக் கடை பிளாஸ்டிக் பைகளையும் ஹேன்ட் பேக்கஜ் ஆக வைத்திருந்ததை பார்த்து மனது மிகவும் கனத்து இருந்தது.

சற்று அவர்களைப் பற்றி யோசித்த போது,

வேலைப் பற்றி என்ன ஏது என்று தெரியாமல், ப்ரோக்கர் சொல்லும் தொகையை கொடுத்து விட்டு இன்று நாளை என்று காத்திருந்து ஊரிலிருந்து கிளம்பி வந்து, என்று ஊருக்கு திரும்ப போகிறோம் என்பதை பற்றி தெரியாமல், சொந்த பந்தம் எல்லாம் சென்னை ஏர்போர்ட்டிலே விட்டு விட்டு கிளம்பி இருகின்றனர்.

நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன் , பல குடும்பங்கள் மிகவும் நல்ல நிலைக்கே வந்து இருக்கின்றன.

ஏதோ ஏதோ ஞாபகங்கள் வந்து கொண்டிருந்தன. வெற்றி கொடி கட்டு படம் கூட ஞாபகம் வந்தது.

மனது புறப்படும் எல்லோரும் ஏமாற்றபடாமல், அவர்களுக்குண்டான வேளையில் பிரச்சனை இல்லமால் சேர வேண்டுமே என்று ஆதங்கப்பட்டது.
ஆனால் இப்போது கிடைத்த இச்செய்தி, எத்தனை குடும்பங்களின் நம்பிக்கை கீற்றை கருக்கியதோ, எத்தனை குடும்பங்களின் கனவுகளை பொசுக்கியதோ என்று எண்ணும் போதே மனது கணக்கிறது!!!
« Home | Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »

0 Comments:

Post a Comment