அமிழ்து: December 2006



சென்னைக் காதல்

Monday, December 11, 2006
இதுவரை சினிமா விமர்சனங்களை வாய் வழியாக பகிர்ந்து கொண்டிருக்கிறேனே தவிற வலைப் பதிவாக இட வேன்டும் என்று தோணியதில்லை. என்னை எழுதத் தூண்டியது கடந்த சனிக் கிழமை பார்த்துவிட்டு பெங்களூர் குளிரில் நடுக்கத்துடன் வீடு திரும்ப வைத்த விக்ரமனின் சென்னைக் காதல்.

சனிக் கிழமை மதியம் CMH ரோடு அடையார் ஆனந்த பவனில் சாப்பிட்டுவிட்டு திக்கு தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்த போது தான் நண்பன் ஒருவன் தொலைபேசினான் சென்னைக் காதல் போகலாம் என்று. விக்ரமன் படம் என்றவுடன் ஓசூர் பஸ்ஸில் அடிக்கடி பார்க்கும் உன்னை நினைத்து நிழலாடி பயமுறுத்தியது. சனிக் கிழமை மந்தமாகத் தான் இருந்தது. சரி போகலாம் என்று முடிவெடுத்தேன்.

தாவரகரெவில் உள்ள இன்னொரு நண்பன் வீட்டுக்கு அருகில் உள்ள லெக்ஷ்மி திரையரங்கத்துக்கு போவாது என முடிவு செய்தோம். இரவுக் காட்சி எட்டு மணிக்கெல்லாம் ஆரம்பித்துவிடும். புறப்படும் முன் நண்பனிடம் இன்னொரு முறைக் கேட்டுக் கொண்டேன் "வெயில்" போலாமே என்று… அவனோ "கரகாட்டக்காரன்" ரேஞ்சில் விக்ரமனே சொல்லி விட்டார் “இந்த படத்தில் புது விக்ரமனை பார்க்கலாம் என்று” என்றான். நல்ல வேலையாக இசை S.A. ராஜ்குமார் இல்லை…ஜோஷ்வா சீதர்… தப்பிதோம் என்று நினைத்து விக்ரமனே சொல்லிட்டாருள்ல என்று புறப்பட்டு விட்டோம்.

ஏழு நாப்பது போல் இடத்தை அடைந்தோம். அங்கும் இங்குமாக 40-45 பேர் நின்றிருந்தார்கள். கதவு திறந்தவுடன் எல்லோரும் திபு திபுவென ஓடி டிக்கெட் கவுன்டரை மொய்த்துக் கொண்டோம். நாப்பது ரூபாய் டிக்கெட் வாங்கி உள்ளே சென்றால் பிளாஸ்டிக் சேர் தான் போட்டிருந்தார்கள். சரியாக எட்டு மணிக்கு படம் போட்டுவிட்டார்கள்.

படம் ஆரம்பித்துவிட்டார்கள்… முதல் காட்சியே சண்டைக் காட்சியாக இருந்தது. அதற்கு அடுத்த அடுத்தக் காட்சிகளிலும் பரத் யார் யாரயோ அடித்துக் கொன்டிருந்தார்… அப்பாவிடம் திட்டு வாங்கிக் கொண்டிருந்தார்…அப்பவாஇ முறைத்துக் கொண்டு வளரும் பிள்ளையாக காண்பிக்கிறார்கள். Sஅமெ ஒல்ட் காதல் கதை தான்…ஹீரொயின் அப்பா வில்லன். ஓரு மாப்பிள்ளை கேரக்டர், படம் முடிவில் ஹீரோவுக்கு ஹிறொயினை விட்டுக் கொடுத்து விட்டு நீண்ட டயலாக் பேசி விட்டு போவார்… நல்ல வேலை இந்த படத்தில் அந்த மாதிரி தியாகி ஆக்கவில்லை இவரை.

காமெடி என்ற பெயரில் பரத் குடும்பம் எருமை மாட்டுடன் போராடிக் கொண்டிருந்தது…அப்பொது தியேட்டரே மயான அமைதியில் இருந்தட் தன் சூப்பர் காமெடி. இது இல்லாமல் பரத்தின் நண்பர்களில் ஒருவராக வரும் கோவை குணா (விஜய் டிவியில் வரும் கலக்கப் போவது யெறுவில் வந்தவர் தான்..) இவர் பண்ணும் மிமிக்கிரி வகையறாக்களைப் பார்க்கும் போது விஜய் டிவி பார்த்துக்கொண்டிருப்பது போன்ற உணர்வை தவிர்க்க முடியவில்லை. முதல் படத்திலயே இவருக்கு நல்ல ரோல் குடுத்திருக்கிறார் டைரக்டர்… பாவம் இவரால் தான் சுமையைத் தாங்க முடியவில்லை. இன்னொரு விஜய் டிவிக்காரருக்குட வாய்ப்பு குடுத்திருந்தார்கள் இன்ஸ்பெக்டராக.

ராதாரவி வழக்கம் போல் ஹீரொயின் அப்பா. தொழிலே வெட்டு குத்து தான்… ஆனால் பாவம் அவர் மகள் ஜெனிலியாவிர்க்கு மட்டும் 20 வயது வரை தெரியவில்லையாம். உலகம் தெரியாத புள்ள…? :) ராதாரவிக்கு "பின் தலையில் தன் கையால் தட்டிக் கொள்வது போல்" ஒரு மேனரிஸம் வேறு… :)

பாவம் அந்த தெலுங்கு நடிகர் பரத்துக்கு அப்பவாக நடித்திருந்தார்.. எப்போது பார்கும் போதும் கையில் ஒரு பேக்குடனே வந்து கொண்டிருந்தார்… ஆபீஸ்ல வேலைப் பார்கிறராம்…! தெலுங்கில் "டப்" செய்யும் உத்தேசதில் இவரை போட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

பரத், நன்றாக வந்து கொண்டிருக்கும் நேரத்தில் பாவம் விக்ரமனிடம் மாட்டிக்கொண்டார். பெரிய டைரக்டர் என்பதால் படதை ஒத்துக் கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்.

பாடல்கள்… வேண்டாம் சாமி என்ற பாட்டு மட்டும் வித்தாயசமாக இருக்கிறது… மற்ற பாடல்கள் எல்லம் கிராபிக்ஸில் ஏதொ பண்ணி இருக்கிறார்கள்…

நண்பர்கள் தேவையில்லாத இடங்களில் எல்லாம் சிரித்துக் கொண்டு வருவது போல் காண்பிக்கிறார்கள்… உ-ம்: பரத் கத்தி குத்துப்பட்டு ஆஸ்பத்திரி கட்டுகளுடன் வரும் போது நண்பர்கள் சிரித்த முகத்துடன் வரவேற்கிரார்கள்.

மற்றுமொரு தமிழ் படம் என்பது தவிற சொல்வதற்க்கு ஒன்னும் இல்லை. தமிழ் சினிமா இன்னும் திருந்தவில்லை என்பதற்க்கு மற்றுமொரு உதாரனம்.

நண்பன் சொன்னது போல் விக்ரமன் மாறி விட்டார் தான்.