அமிழ்து: July 2006பஹ்ரைனில் 16 தமிழர் மரணம்!

Sunday, July 30, 2006
இந்த செய்தியைக் கேட்டவுடன் முதலில் கண்களில் நீர் தான் வந்தது. நான் சென்னை விமான நிலையத்தில் ஃப்ரான்க்ஃப்ர்ட் விமானத்திற்கு காத்திருந்த வேளையில், தமிழகத்தின் பல்வேறு கிராமங்களிலிருந்து வந்திருந்த பலர் சிங்கப்பூர் விமானதிற்க்கும், வளைகுடா விமானங்களுக்கும் காத்திருந்தனர். சிலர் மஞ்சள் பையும், சிலர் ஜவுளிக் கடை பிளாஸ்டிக் பைகளையும் ஹேன்ட் பேக்கஜ் ஆக வைத்திருந்ததை பார்த்து மனது மிகவும் கனத்து இருந்தது.

சற்று அவர்களைப் பற்றி யோசித்த போது,

வேலைப் பற்றி என்ன ஏது என்று தெரியாமல், ப்ரோக்கர் சொல்லும் தொகையை கொடுத்து விட்டு இன்று நாளை என்று காத்திருந்து ஊரிலிருந்து கிளம்பி வந்து, என்று ஊருக்கு திரும்ப போகிறோம் என்பதை பற்றி தெரியாமல், சொந்த பந்தம் எல்லாம் சென்னை ஏர்போர்ட்டிலே விட்டு விட்டு கிளம்பி இருகின்றனர்.

நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன் , பல குடும்பங்கள் மிகவும் நல்ல நிலைக்கே வந்து இருக்கின்றன.

ஏதோ ஏதோ ஞாபகங்கள் வந்து கொண்டிருந்தன. வெற்றி கொடி கட்டு படம் கூட ஞாபகம் வந்தது.

மனது புறப்படும் எல்லோரும் ஏமாற்றபடாமல், அவர்களுக்குண்டான வேளையில் பிரச்சனை இல்லமால் சேர வேண்டுமே என்று ஆதங்கப்பட்டது.
ஆனால் இப்போது கிடைத்த இச்செய்தி, எத்தனை குடும்பங்களின் நம்பிக்கை கீற்றை கருக்கியதோ, எத்தனை குடும்பங்களின் கனவுகளை பொசுக்கியதோ என்று எண்ணும் போதே மனது கணக்கிறது!!!

கனடா பயனமும் நானும் - பாகம் 1

Saturday, July 22, 2006
கனடா பயனமும் நானும் - பாகம் 1

கடந்த நான்கு வருடங்களாக நானும் Software field-இல் குப்பை கொட்டிகொண்டு இருந்தாலும், நான் இன்னும் பெங்க்ளூருக்கும் திருச்சிக்கும் தான் பயனம் செய்து கொண்டிருந்தேனே தவிற அதைத் தாண்டி எஙும் செல்லவில்லை.
இதனால் உறவினர்கள் மத்தியில் சந்தேக ரேகை ஓடிக்கொண்டுதான் இருந்தது, இவன் சொfட்நரெ-ல தான் இருக்கிறானா என்று... ஊருக்கு போகும் போது எல்லாம், அவர்களுக்கு தெரிந்தவர்கள் இங்க இருக்கான், அங்க இருக்கான் என்று பேச்சுக்கள் தான் காதில் விழும்...
னான் இதை பத்தி எல்லாம் கவலைப் படாமல் வெள்ளிக் கிழமை KSRTC-யோ, TNSTC-யோ பிடித்து, சன்டே ட்ரைனை பிடித்து போஇ வந்து கொண்டிருந்தேன்.
இந்த நேரத்தில் தான் வராது வந்த மாமணியை, இந்த ட்ரிப் வந்து சேர்ந்தது. அதிகம் இல்லை ஜென்டில்மேன், ஒரு மாதம் தான் என்றாலும், கடைசியில், பாஸ்போர்ட் எக்ஸ்பையர் ஆகு முன் வந்து விட்டது.
ஆகா, எல்லம் தெரிந்தப்பின், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் சொல்லி ஆகி விட்டது. கிளம்பும் நாளும் வந்து விட்டது...!
பெங்க்ளூரிலிருந்து சென்னை சென்று, அங்கிருந்து Fரன்க்fஉர்ட் வழியாக டொரொன்டொ செல்வது தான் பயனா ஏற்பாடு..!