திருச்சி - பெங்களூர் - ஒரு ஜன்னலோர பயணம்!
வழக்கமாக இரவிலேயே திருச்சியிலிருந்து பெங்களூர் செல்லும் நான் பேருந்திலும் இரயிலிலும் டிக்கெட் கிடைக்காததினால் ஞாயிற்றுக் கிழமைக் காலையில் கிளம்பி சேலம் ஓசூர் என மாறி மாறி போகலாம் என முடிவு செய்து கிளம்பிவிட்டேன்.
நினைக்கும் போதே சற்று பயமாகதானிருந்தது... 350 கிமீ வெயிலில் எப்படி போவது என்று!
எஸ். இராமகிருஷ்ணன் தனது தொடரில் பஸ் பயணத்தைப் பற்றி ஒரு முறை எழுதியிருந்ததை ஞாபகப்படுத்திக்கொண்டேன்.
திருச்சியிலிருந்து கிளம்பும் போதே உயிர்மை மற்றும் தீராந்தி புத்தகங்களை வாங்கிக்கொண்டேன். மற்றப் புத்தகங்களை சிறிது நேரத்திலேயே படித்து விடுவேன்... இந்த மாதிரி புத்தகங்கள் என் சிற்றறிவுக்கு எட்ட நேரம் பிடிக்கும் என்பதனால் நெடிய பயணத்திற்க்கு உறுதுணையாக இருக்கும் என்று வாங்கிக்கொண்டேன்.
நத்தை ஓடு போல இரவு உலகை மூடிக்கொள்கிறது... எதுவும் தெரிவதில்லை. பகல் எல்லாவற்றையும் திறந்து விடுகிறது. இரவுப் பயணத்தில் ஜன்னல் என்பது காற்று வருவதற்கும் பல நேரம் அதை பாதி தூக்கத்தில் மூட முயற்சிப்பதிலேயே முடிந்து விடுகிறது! ஆனால் பகல் பொழுதின் ஜன்னல் எல்லையில்லா அனுபவத்தை கொடுக்கிறது.
வயல்வெளிகள், பள்ளிக்கூடங்கள், கிரிக்கெட் விளையாடும் சிறார்கள், மரத்தடி பெட்டிக்கடைகள், காலி மனைகள், வீடாக மாறும் வயல்வெளிகள்... எல்லாம் கடந்துப் போகிறது.
தண்ணீருக்காக அல்லாடும் மக்கள்... காலிக் குடங்கள் எல்லாம் கடந்து போகிறது...
மாமூல் பிரச்சினைகள் பேருந்தில்...சில்லறைத் தட்டுப்பாடு, உள்ளே போ சப்தங்கள்... இத்யாதி... இத்யாதி...
நமக்கு ஒரு நாள் பயணம்... ஓட்டுனர், நடத்துனுருக்கு மற்றுமொரு பயணம்...
என்னைப்போன்ற நீண்டப் பயணத்திற்கு உள்ளாகிறவர்களுக்கு, இது போன்றவைகள் பயணத்தை இலகுவாக்குகிறது. எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ஜன்னலோரமாக உட்கார்ந்து கொண்டு வேடிக்கைப் பார்ப்பதென்பது யானையைப் பார்க்கும்போது ஏற்படும் சந்தோஷத்திற்கு சமம்.

Labels: travel
4 Comments:
பதிவு நல்லா இருக்கு.
பயணம் = மகிழ்ச்சி
Can't agree you more. I 2 love the window travelling. I usually break my journey from Blore to my hometown(actually no other option) and i love the Hosur - Palakod - Salem strech in the evening time journey.
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி துளசி அக்கா! நான் நிறைய எழுத வேண்டும் என நினைத்து, ஆனால் முடித்து விட்டேன் திடீரென!
எழுதுங்கள் மிகவும் நன்றாக இருக்கின்றது எனக்கும் சென்ற முறை இந்தியா வந்த போது அந்த அனுபவம் கிடைத்தது ஆனால் இரவில் ------திருச்சி----பெங்களூர்
Post a Comment