கர்நாடக பந்தும் சில காதல் கவிதை/கட்டுரை-களும்!
முழு வேலை நிறுத்ததால் 3 நாட்களான விடுமுறையின் எச்சத்தில் இருந்த போது மிகவும் bore ஆகி தேன்கூடை மேய்ந்துக்கொண்டிருந்தேன்..
காதலர் தின பதிவுகளைப் பார்த்த போது சட்டென நானும் ஏதாவது எழுத வேண்டும் என்று தோன்றியது.
நான் எழுதியதை எந்த வகையில் சேர்ப்பது என்று தெரியவில்லை...இதைக் கவிதையாகப் பாடுவதோ கட்டுரையாக பாவிப்பதோ வாசிப்பவரின் கற்பனா சக்தியைப் பொருத்தது!
இவையனைத்தும் என் சொந்த அனுபவம் இல்லை... :)
என் ஒரு தலைக் காதலிகளே
ஒரு முறையாவது சொல்லுங்கள்
நான் உங்களால் காதலிக்கப்பட்டிருந்தால்!
என்னுடைய காதல் யாருக்கும் தெரியாது...
என் காதலி உட்பட!
காதலைத் தெரியப்படுத்தாதீர்கள்...
சில நேரங்களில் தெரியப்படுத்தாத காதல்கள் தான் நிறைவேறுகிறது...
மனதளவிலாவது!
உன்னிடம் பேச ஒப்பனை செய்யப்பட்ட வார்த்தைகள்
பார்த்தவுடன் கலைக்கிறது வேடத்தை!
உன் வீட்டு ரோஜா சிரிக்கிறது தினமும்
வியப்பில்லை தான்
உன் தரிசனம் கிடைக்கிறதே!
இனியாவது என்னிடம் சொல்லிவிட்டு போ
நீ எங்கு செல்கிறாய் என்று...
உன் பூந்தொட்டிக்களுக்குப் பதில் சொல்லி மாளவில்லை என்னால்!
உன் வீட்டுத் தாழ்ப்பாளுக்கு எண்ணெயிடாதே...
பின், உன் வரவை யார் அறிவிப்பது?!
2 Comments:
நல்லா இருக்குங்க...வாழ்த்துக்கள். அடுத்த காதலர் தினத்திலாவது ஒருதலை காதலிலிருந்து காதலராக பதவி உயர்வு...
வருகைக்கு நன்றி உதயா!
இப்படித்தான் காதல் பற்றிய விவரம் தெரிஞ்ச நாளிலிருந்து போகிறது... பார்க்கலாம் உங்கள் வாக்கு பலிக்குதா என்று... :)
Post a Comment