எல்லோர் தலைக்கும் வந்தது!
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்பார்கள்...
ஆனால் இப்போது கர்நாடகத்தில் இரு சக்கர ஓட்டிகள் அனைவருக்கும் தலைக்கு வந்து விட்டது தலைப்பாகை(ஹெல்மட்).
இப்போது அப்போது என்று சொல்லிக்கொண்டிருந்த அரசு நவம்பர் 1-லிருந்து கட்டாயம் என்று அறிவித்துவிட்டது.
ஹெல்மட் கட்டாயம் என்ற அரசின் ஆணைக்குப் பிறகு பலவிதமான ஹெல்மட்-களை சாலைகளில் பார்க்க முடிகிறது.
காலை இளவெயிலில் வெறும் தலையுடன் பிரகாசமாக இரு சக்கர வாகனங்களில் பறந்து கொண்டிருந்தவர்கள், இப்பொழுது கருப்பு, சிகப்பு, மற்றும் இன்னப் பிற நிறங்களில் சூரிய ஒளிப் பளிச்சிட பறந்து கொண்டிருக்கிறார்கள்.
ஹெல்மட் அணிவதால் ஏற்ப்படும் பலா பலன்களை நிறையப் பார்த்து விட்டதால், வேறு யார் யாருக்கெல்லாம் இச்சட்டத்தால் வசதி என்றுப் பார்ப்போம்.
* 60-65 களில் ஸ்கூட்டருடன் வாங்கிய ஹெல்மடை தனது வீட்டாரின் ஏச்சுப் பேச்சுகளுக்குப் பிறகும் பத்திரமாகப் பாதுகாத்து வரும் பெரியவர்களுக்கு - ஆமாங்க சாலையில் போகும் பத்தில் இரு வாகனங்களில் அறுபதுகளில் வாங்கியது போகிறது. இவர்கள் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு சாலைகளில் போகும் போது, அவர்கள் அந்த பொருளை(!) பல ஏச்சுகளுக்குமிடையில் போற்றிப் பாதுகாத்ததை புரிய வைத்த திருப்தியுடன் செல்லவதாக தெரிகிறது.
* ஹெல்மட் போன்ற வடிவமுடைய தலையில் அணியக் கூடிய வஸ்துவை வைத்திருந்தவர்கள் - ஆமாங்க, ஹெல்மட் சட்டத்தால் தலையில் ஏதாவது ஒன்று இருந்தால் போதும் என்று தப்பு அர்த்தம் பண்ணி கொண்டவர்கள் இவர்கள்... ஹெல்மட் என்று இவர்கள் அணிந்து வருவது சாலையில் வரும் மற்ற வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படுத்தாமல் இருந்தால் சரி.
* எப்போதும் போல "அதை" எதிர் பார்க்கும் காவலருக்கு... ஏற்கனவே ஆயிரம் காரணங்கள் இருக்கும் போது வெறும் கண்ணால் பார்த்தவுடன் கிடைக்கும் இந்த உடனடிப் பரிசு நிச்சயம் அவர்களை மகிழ்விக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
* நிச்சயம் ஹெல்மட் வியாபாரிகளுக்கு - ஈSஈ முத்திரையுடன் தான் அணிய வேண்டும் என்ற அரசின் ஆணைக்கிணங்க அதையும் கால நேரம் பார்க்காமல் உடனடியாகப் போட்டு சகல விதமான ஹெல்மட்-களையும் ஏதோ ஒரு விலைப் போட்டு விற்று வரும் வியாபாரிகளுக்கு...
எது எப்படியோ அனைவரின் தலைக்கும் ஒன்று வந்து விட்டது...!

0 Comments:
Post a Comment