அமிழ்து: யோசிங்க - 1. நன்றி!



யோசிங்க - 1. நன்றி!


அன்றாட வாழ்க்கையில நமக்கு எவ்வளவோ பிரச்சினை!


காலையில பஸ் ஸ்டாப்பிங்ல நிக்குமா... நின்னா நமக்கு உட்கார இடம் கிடைக்குமா... இடம் கிடைச்சா பக்கத்தில முடியாதவங்களோ, வயசானவங்களோ வந்து நின்னு விடுவாங்களோனு எவ்வளவோ பிரச்சினையிருக்கு... இந்த நேரத்தில என்னத்த யோசிக்கிறதுனு யோசிச்சா அத கொஞ்சம் நம்ப மாத்திக்கலாம்.


ஆமாங்க நம்ப நாட்டுல ஏகப்பட்ட நீதிக் கதைகள், இதிகாசங்கள் எல்லாம் இருந்தாலும் நாம அத "follow" பண்ணுறோமா...? முதல்ல படிக்கிறதே கேள்விக் குறியா இருக்கறப்போ மத்தத எப்படிங்க எதிர்ப்பார்க்கமுடியும்.
ஆனா நம்ப என்ன சொல்றோம், நம்ம கலாச்சாரம் பெரிசு, மேற்கத்திய நாடுகளிலிருந்து நாம கலாச்சாரத்தில தழைத்தோங்கியிருக்கோம் அது இதுனு... நம்ப என்ன பண்ணறோம்... சின்ன சின்ன விசயங்கள்ல எப்படி நடந்துக்குறோம்... நன்றி சொல்வதுக்குக் கூட யோசிக்கிறோம்...


இன்னைக்கு நான் சொல்ல நினைக்கிறது "நன்றி"யப் பத்தி.


என்ன தான் ஆட்டோ டிரைவர் மீட்டருக்கு மேல கேட்டாலும் இறங்கினோன ஒரு தாங்கஸ் சொன்ன எப்படி இருக்கும்...


என்ன தான் பஸ் நடத்துனர் கோபமாயிருந்தாலும், டிக்கெட் கொடுத்தோன ஒரு தாங்கஸ் சொல்லிப்பாருங்க அவரு ரியாக்ஷ்ன..

பால்க்கடை, மளிகைக்கடை, சலூன், டீக்கடை, உணவகம் என இது மாதிரி எங்கெங்கெல்லாம் தாங்கஸ் சொல்ல முடியுமோ சொல்லுங்க...


மேலை நாடுகள்ல இது ஒரு "attitude"-யாயிருக்கு... ஆனா நம்பக்கிட்ட என்ன மனோபாவம் இருக்கு...? "நாம காசு கொடுக்குறோம் அவுங்க வேல பாக்குறாங்கனு"


நம்மளோட இந்த "attitude" மாறுமா? இதுல என்ன பெரிய மாற்றம் வரும்னு நீங்க நினைக்கலாம்! ஒன்னுமில்லங்க... , அவங்கள நாம மனுஷர்களா மதிக்கிறோமுன்னு சொல்ற மாதிரி தாங்க... ரெண்டுப்பக்கமும் ஒரு மகிழ்ச்சி. பள்ளிக்கூடங்கள்ல என்னதான் சொல்லிக் கொடுத்திருந்தாலும் பின்னாளில மறந்திடுது...


இவ்வளவு நேரம் பொறுமையா படிச்சதற்கு ரொம்ப "தாங்க்ஸ்ங்க" :)


என்னங்க, ரொம்ப அட்வைஸ் பண்ற மாதிரி இருக்கா... கருத்து கந்தசாமி கணக்கா இருந்தாலும் பரவாயில்லைனு தான் எழுதுறேன்...முடிஞ்சா இந்த கருத்து கந்தசாமி அடிக்கடி தோன்றுவார்.:)

Labels: ,

« Home | Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »

4 Comments:

At 12:41 PM, Anonymous Anonymous said...

I agree with you 100 percent.

 
At 10:08 AM, Blogger அமிழ்து - Sathis M R said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, அனானி!

 
At 12:02 PM, Blogger none said...

ஆட நீங்க வேர!
நான் நீங்க சொன்ன ஆட்டோ டிரைவர் , பஸ் நடத்துனர், பால்க்கடை, மளிகைக்கடை, டீக்கடை, உணவகம் என இது மாதிரி எங்கெங்கெல்லாம் தாங்கஸ் சொல்ல முடியுமோ அங்கெல்லாம் சொல்லிட்டு தான் இருக்கேன்!

இப்போ எல்லாம் நான் thanks சொல்லி சொல்லி எங்க office இருக்கும் building lift operator 'No Mention' சொல்ல ஆரம்பிசிட்டார்னா பார்த்துக்கோங்களேன்!

 
At 4:15 AM, Anonymous Anonymous said...

நல்ல கருத்து என்பதில் சந்தேகம் இல்லை. பெரும்பாலாருக்கு மற்றவரின் ஏளனம் ஒரு பொருட்டாக இருக்கும். ஆதலினால் ஆசை இருப்பினும் 'நன்றி' மறப்பவர் ஆகின்றனர். பள்ளிகளில் கிள்ளைகளாக இருக்கும் போதே சொல்லிக்கொடுக்க வேண்டிய விஷயம் இது. எனினும் வாழ்த்துக்கள் மீண்டும் நல்ல யோசனைக்கு !

- ராஜா

 

Post a Comment