அமிழ்து: அழகுச்சங்கிலி



அழகுச்சங்கிலி

குறைக்குடம் அழகுச் சங்கிலியில் என்னையும் இணைத்துள்ளார், நான் அழகாய் நினைத்திருப்பவைகளைப் பற்றி ஒரு முறை யோசிக்கவைத்ததற்கு நன்றி!

எனக்கு அழகாய்ப் படுவது எது என யோசிக்கையில் இயற்கையழகுகள் தான் மேலோங்கி நிற்கிறது.

தங்கமாய் மாறும் சூரிய கதிர்கள்!
சிறு வயதில் கோடை விடுமுறைக்கு திருச்சி முக்கொம்பு அருகிலுள்ள ஊருக்குச் செல்வோம்! கோடை மாலையில் குளியாலாட அங்கும் இங்குமாய் ஆரவாரமற்று ஓடி வரும் காவிரிக்குச் செல்வோம்... தன் கடமையை அன்றும் செவ்வனே முடித்துவிட்ட திருப்தியுடன் வீட்டுக்கு திரும்பும் சூரியனார் தன் கதிர்களை தண்ணீரில் பரப்பி தங்கமாய் மாற்றும் அழகே அழகு! பார்த்துக் கொண்டேயிருக்கலாம்!

அடை மழை!
சிறு தூரல் நச நச...! பெரு மழை குளு குளு! பேருந்தின் உள்ளே கண்ணாடி போட்ட ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டோ மாடி வீட்டின் மாடத்திலிருந்தோ பார்க்கும் போது பெய்யும் அடை மழை அழகோ அழகு!

யானை நடை!
தூண் போன்ற நான்கு கால்களையும் தூக்கி தூக்கி, காதுகளை ஆட்டி வரும் யானையின் அசமந்தமும் அழகே அழகு! சிறு வயதில் வீடு தேடி மணியோசையோடு வரும் யானை என்றுமே அழகு தான்! யானைப் போன்று நடந்து வரும் மனிதர்களைப் பார்ப்பதும் எனக்கு அழகாகவே தெரிகிறது :))

அதிகாலை நகரத்து சாலைகள்!
பகல் நேரங்களில் பர பரத்துக் கிடக்கும் நகரத்துச் சாலைகள் அமைதியாய் அதிகாலையில் இளைப்பாறும் அழகு அருமை. இதற்காகவே பல நாட்கள் எனது அதிகாலைத் தூக்கத்தை துறந்துள்ளேன்.

கிராமத்து வயல்வெளி
நீண்டு செல்லும் மண் சாலையும், அதனை ஒட்டியே நெல் வாசனையோடு கூடவே வரும் வயல்வெளியும் எனக்கு என்றும் மாறா அழகு. உம்ம்ம்... ஆனால் இப்பொழுதெல்லாம் அது போன்ற கிராமங்களுக்கு சென்று ரொம்ப நாளாகிறது.

பயணம்!
பயணம் எப்போதுமே எனக்கு அலாதியான அழகுதான். புது மனிதர்கள், புது சாலைகள்.... வண்டியின் ஜன்னல் நொடிக்கொருமுறை அள்ளித் தெளிக்கும் காட்சிகள் அழகே அழகு!

நான் இந்த அழகுச் சங்கிலிக்கு அழைக்க நினைப்பது
1. மு. கார்த்திக்கேயன்
2. துளசி கோபால்
3. நாமக்கல் சிபி

Labels: ,

« Home | Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »

19 Comments:

At 1:19 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

நன்றாக இருக்கிறது உங்கள் அழகுப் பதிவு!

நீங்கள் தமிழ்மணத்தில் சேரவில்லையா? உங்கள் பதிவுகள் அங்கு வரக்காணோமே.

நீங்கள் அலைன்மெண்ட் ஜஸ்டிபைய்ட் எனத் தேர்ந்தெடுத்து இருப்பதால் நெருப்பு நரி உலாவியில் உங்கள் பதிவு சரி வரத் தெரியவில்லை. அதனை இடது பக்கல் அலைண்டாக மாற்றுங்களேன்.

துளசியை நான் முன்பே அழைத்துவிட்டேன். அதற்குப் பதில் நீங்கள் வேறு யாரையேனும் அழைத்து அவர்களிடம் தகவல் தெரிவிக்கலாமே.

அழகுப் பதிவுக்கு நன்றி.

 
At 1:25 PM, Blogger துளசி கோபால் said...

அழகுச்சங்கிலியைப் பிடிச்சுக்கிட்டு அப்படியே மேலே போங்க. .
ஆரம்பக் கண்ணியை அடுத்து.........ஆங்........ அங்கேதான்.நான் நிக்கறது
தெரியுதா? இன்னும் எழுதலை.

ஆனாலும் அழைச்சதுக்கு நன்றி. ஆஹா.......அழகுன்னதும் என் நினைவா? :-)))

யோசிச்சுப் பார்த்தால் ஏன்?னு புரியுது.

//யானைப் போன்று நடந்து வரும் மனிதர்களைப்
பார்ப்பதும் எனக்கு அழகாகவே தெரிகிறது :)) //

புரிஞ்சுருச்சு:-))))))

 
At 2:26 PM, Blogger ப்ரசன்னா (குறைகுடம்) said...

ரசிக்கும்படி இருக்கிறது உங்கள் அழகுப்பதிவு.

 
At 5:17 PM, Blogger காட்டாறு said...

மழை... ரொம்ப அழகு.... கொட்டும் மழையில் நனைந்து... சில்லென பானம் அருந்தி...

அடைமழை... வேடிக்கைப் பார்க்க அழகு. நனைந்தால்.....

மழையின் நினைவு. நேரமிருந்தால், ஒரு நடை போய் வாருங்கள் இந்த பதிவிற்கு
http://kaattaaru.blogspot.com/2007/03/blog-post_1184.html

 
At 9:03 PM, Blogger மு.கார்த்திகேயன் said...

அழைத்ததிற்கு நன்றிங்க அமிழ்து.. இப்போதான் எழுதி முடிச்சேங்க..

இவ்வளவு நாட்கள் வராததிற்கு மன்னிசுக்கோங்க.. இனிமேல் அட்டென்டன்ஸ் கரெக்டா போட்டுடுறேங்க அமிழ்து...

 
At 9:07 PM, Blogger மு.கார்த்திகேயன் said...

/திருச்சி முக்கொம்பு //

ரசிக்க வைக்கிற இடமாச்சே இது...

 
At 9:14 PM, Blogger மு.கார்த்திகேயன் said...

//அதிகாலை நகரத்து சாலைகள்!
//

ரொம்ப அனுபவச்சு எழுதியிருக்கீங்க அமிழ்து..

 
At 11:03 PM, Anonymous Anonymous said...

அருமையன படைப்பு அமிழ்து.. கோபி அ

 
At 7:58 AM, Blogger அமிழ்து - Sathis M R said...

வருகைக்கு நன்றி இலவசக்கொத்தனாரே!
//நீங்கள் தமிழ்மணத்தில் சேரவில்லையா? உங்கள் பதிவுகள் அங்கு வரக்காணோமே. //
தமிழ் மனத்தில் இணைந்திருக்கிறேனே!
நீங்கள் அலைன்மெண்ட் ஜஸ்டிபைய்ட் எனத் தேர்ந்தெடுத்து இருப்பதால் நெருப்பு நரி உலாவியில் உங்கள் பதிவு சரி வரத் தெரியவில்லை. அதனை இடது பக்கல் அலைண்டாக மாற்றுங்களேன்.
//ஓ அப்படியா! தகவலுக்கு நன்றி கொத்தனாரே! மாற்றிவிடுகிறேன்

 
At 7:58 AM, Blogger அமிழ்து - Sathis M R said...

//துளசியை நான் முன்பே அழைத்துவிட்டேன். அதற்குப் பதில் நீங்கள் வேறு யாரையேனும் அழைத்து அவர்களிடம் தகவல் தெரிவிக்கலாமே. //
ஆஹா! வேறு யாரையாவது அழைக்கிறேன்.

 
At 7:59 AM, Blogger அமிழ்து - Sathis M R said...

வருகைக்கு நன்றி துளசியக்கா!

//ஆனாலும் அழைச்சதுக்கு நன்றி. ஆஹா.......அழகுன்னதும் என் நினைவா? :-)))
யோசிச்சுப் பார்த்தால் ஏன்?னு புரியுது.//
ஆமா அழகுன்னதும் உங்க நினைவு தான்!

//யானைப் போன்று நடந்து வரும் மனிதர்களைப்
பார்ப்பதும் எனக்கு அழகாகவே தெரிகிறது :))
புரிஞ்சுருச்சு:-))))))//

புரிஞ்சுருச்சா... ஆகா என்ன புரிஞ்சுச்சு?!

 
At 7:59 AM, Blogger அமிழ்து - Sathis M R said...

//ரசிக்கும்படி இருக்கிறது உங்கள் அழகுப்பதிவு.//
நன்றி குறைக்குடத்தாரே...! உங்க பதிவுகளைப் படிச்சேன்! குறைக்குடம் மாறி தெரியலையே!

 
At 8:00 AM, Blogger அமிழ்து - Sathis M R said...

//மழை... ரொம்ப அழகு.... கொட்டும் மழையில் நனைந்து... சில்லென பானம் அருந்தி...
அடைமழை... வேடிக்கைப் பார்க்க அழகு. நனைந்தால்.....//

மழை எப்போதும் அழகு தான்! நேத்து மழையப் பத்தி எழுதிட்டுப் பார்த்த இன்னைக்கு பெங்களூர்ல சரியான மழை!

உங்கப் பதிவுகளெல்லாம் அருமைக் காட்டாறு! தொடர்ந்து எழுதுங்கள்!

 
At 8:00 AM, Blogger அமிழ்து - Sathis M R said...

//இவ்வளவு நாட்கள் வராததிற்கு மன்னிசுக்கோங்க.. இனிமேல் அட்டென்டன்ஸ் கரெக்டா போட்டுடுறேங்க அமிழ்து...//
மறக்காம அப்ப அப்ப வந்துட்டுப் போங்க!

//திருச்சி முக்கொம்பு //
//ரசிக்க வைக்கிற இடமாச்சே இது...//
ஆமா கார்த்தி திருச்சியில இருக்கிற ஒண்ணு ரெண்டு இடத்தில இதுவும் ஒண்ணு!

 
At 8:00 AM, Blogger அமிழ்து - Sathis M R said...

//அதிகாலை நகரத்து சாலைகள்!
//ரொம்ப அனுபவச்சு எழுதியிருக்கீங்க அமிழ்து..//

கரெக்ட் கார்த்தி! ஒரு காலத்திலே பரீட்சைக்கு படிக்கிறேன்னு சொல்லிட்டு சீக்கிரமே எந்திரிச்சு டீ குடிக்கிறேன்னு வெளிய ஒரு ரவுண்டு சுத்திட்டு வருவேன்... அப்ப ரோடு அமைதியாயிருக்கும்! காலை நேர மனிதர்களான பால்காரர்கள், காய்கறிக்காரர்கள், பேப்பர் போடுபவர்கள் எல்லாம் போய்க்கொண்டிருப்பார்கள்... அதுவும் மார்கழி மாத காலைப் பொழுது இன்னும் சூப்பர். அதுவொரு சுகமான அனுபவம்!

 
At 8:00 AM, Blogger அமிழ்து - Sathis M R said...

//அருமையன படைப்பு அமிழ்து.. கோபி அ//
முதல் வருகைக்கு நன்றி கோபி அ!!!

 
At 8:24 AM, Blogger அமிழ்து - Sathis M R said...

சவுண்ட் பார்ட்டியையும், விழியனையும் அழகுச் சங்கிலியில் இணைத்துள்ளேன்!

 
At 8:51 PM, Blogger Udhayakumar said...

அமிழ்து, அழப்பிற்க்கு நன்றி!!! வார இறுதியில் என் அழகு பதிவை எழுதுகிறேன்.

 
At 4:38 AM, Blogger ப்ரசன்னா (குறைகுடம்) said...

//நன்றி குறைக்குடத்தாரே...! உங்க பதிவுகளைப் படிச்சேன்! குறைக்குடம் மாறி தெரியலையே!//

நாம் எல்லோருமே குறைகுடம்தானே, அமிழ்து அவர்களே. ப்ரொஃபைல் பெயர் மாற்றியிருக்கிறேன். தெரிகிறதா பாருங்கள் :-)

 

Post a Comment