அமிழ்து: நிலவில் பாட்டி வடை சுடுகிறாரா?



நிலவில் பாட்டி வடை சுடுகிறாரா?


ஆமாங்க சுடுது தான் போலிருக்கு! நேத்து நைட்டு தூக்கம் வராம வீட்டுக்கு வெளிய எட்டிப்பார்த்தப்பத்தான் தெரிஞ்சது நம்மள தவிர இன்னொருத்தரும் முழிச்சிருக்காருன்னு... யாருமில்ல நம்ம நிலா சாரு தான்...

ரொம்ப நாள நானும் பாக்கிறேன் அவரு மட்டும் அப்படியே இருக்காரு... அப்ப அப்ப காணாமப் போனாலும் "gun" மாதிரி அண்ணன் திரும்பி வந்தர்றாரு. கூடவே பாட்டியும் வந்திருது... இன்னைக்கும் பாட்டி எண்ணெய் சட்டியோட உக்காந்திருக்கு... பாட்டி வடை சாப்பிடுறியானு கேக்குற மாதிரி இருந்துச்சு...
நல்ல வாசனை வேற! இருந்தாலும் வேணாமுன்னு சொல்லிட்டேன்...

"local"-ல வடை சாப்பிட்றப்பவே வயிறு மூணு நாளைக்கு தூங்க மாட்டேங்குது... இதில "மூன் "-லேர்ந்து வடை வாங்கி சாப்பிட்டு அதுனால எதுனா பிரச்சினையானா டாக்டர்ட்ட கூட சொல்ல முடியாது "மூன் பாட்டி" கொடுத்த வடையினால தான் பிரச்சனையினு. ஆமா அவரு மட்டும் என்ன நம்பவா போறாரு...

அதனால பாட்டிக்கிட்ட வடையெல்லாம் வேணாம் நீ சில விசயங்கள மட்டும் தெளிவு பண்ணுனு சொல்லிக் கேட்டுகிட்டேன். பாட்டியும் பெரிய மனசு பண்ணி அது பிறந்து வளர்ந்த கதையிலிருந்து, வடை சுட்ற வரைக்கும் சொல்லி முடிச்சுது.

பாட்டி பொறந்தது வளர்ந்தது எல்லாம் மூன்லேயே தானாம். பாட்டி, பாட்டின்றதால அதுக்கு அது அம்மா, அப்பாவப் பத்தியெல்லாம் ஒன்னும் தெரியல... ஆனா ஒரு விசயம் மட்டும் அதுக்கு ஞாபகமிருக்கு... அதுக்கு எண்ணெய்ச் சட்டி அடுப்பெல்லாம் கொடுத்து தொழில் ஆரம்பிச்சுக் கொடுத்தவரு நம்ப ஆம்ஸ்ட்ராங் தானாம்.

பாட்டி, ஆம்ஸ்ட்ராங் அங்க போறப்ப சும்மா ரோமிங்கில இருந்திருக்கு... ஆம்ஸ்ட்ராங் கடுப்பாயிருக்காரு... என்னடா நம்ப அவ்வளவு தூரத்திலிருந்து இங்கே வந்திருக்கோம், நமக்கு ஒரு சிங்கிள் வடைக் கூட சுட்டுக் கொடுக்காம இது பாட்டுக்கு சுத்திக்கிட்டு இருக்குனு. அன்னைக்கு முடிவுப் பண்ணிட்டாரு... பாட்டிக்கு கால் கட்டு போட்றனுமுனு.

ஒரு அடுப்புயும் அட்வைஸையும் பண்ணி கடை ஆரம்பிச்சுக் கொடுத்திருக்காரு. அவரு கிளம்பறப்ப ஒரு வார்த்தை சொல்லியிருக்காரு... நான் வந்துட்டேனில்ல... இனிப் பாரு எல்லாம் கூட்டம் கூட்டமா வருவானுங்கனு. அத நம்பித்தான் பாட்டி இன்னும் வடைக் கடைய மூடமாயிருக்காம்.

பாட்டிக் கதை சொல்லி முடிக்க, பக்கதிலே கோயில் மணிச்சத்தம்... மணியப்பாத்தா காலைல ஏழு...

அய்யகோ! எனக்கு மட்டும் ஏன் கனவுல கூட "பாட்டி" வந்து கதை சொல்லிட்டுப் போகுது!

Labels: , ,

« Home | Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »

7 Comments:

At 12:02 PM, Blogger நாமக்கல் சிபி said...

கதை நல்லா இருக்கே!

 
At 9:47 PM, Blogger அமிழ்து - Sathis M R said...

வருகைக்கு நன்றி நாமக்கல்லாரே!

 
At 11:46 PM, Blogger Bytes Group said...

கணவுல கூட பாட்டி தான் வராங்க, பாட்டியோட பேத்தி வரமாட்டாங்களா.... :) :)

 
At 10:35 AM, Blogger Mr. Cool said...

கதை Super!

 
At 11:34 AM, Anonymous Anonymous said...

//கணவுல கூட பாட்டி தான் வராங்க, பாட்டியோட பேத்தி வரமாட்டாங்களா.... //

அடி செருப்பால! எடுபட்ட பயலுவளா!

 
At 8:06 AM, Blogger அமிழ்து - Sathis M R said...

என்னப் பாட்டி ரொம்ப கோபப்படுற...?

 
At 8:07 AM, Blogger அமிழ்து - Sathis M R said...

வருகைக்கு நன்றி, Music Lover!

 

Post a Comment