அமிழ்து: டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் இன்றைய பிதற்றல்!



டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் இன்றைய பிதற்றல்!

தமிழகத்தில் நேற்று நடைப்பெற்ற நிகழ்வுகளையும், உச்ச நீதி மன்றத்தின் "ஏன் 356-யை உபயோகப்படுத்தக்கூடாது" என்ற கேள்வி தொடர்பாகவும் செய்தி வெளியிட்டிருந்த இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் பெங்களூரு பதிப்பு வழக்கம் போல் தங்களின் அறியாமையைக் காட்டியிருந்தனர். இது அறியாமையா அல்லது அவர்கள் விருப்பக் கருத்தோ தெரியவில்லை. சுட்டிக் காட்ட வேண்டியது நம் கடமை!


அச்செய்தியில் தற்போதைய முதல்வர் கருணாநிதிக்கு 356 ஒன்றும் புதிதல்ல என்றும். ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பிறகு ஜூன் 30 -ந்தேதி 1991 -ம் வருடம் கலைக்கப்பட்டது என்றும் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையோ, ராஜிவ் படுகொலைக்கு முன்பே விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டி அவரது ஆட்சி ஜனவரி 30ந்தேதியே கலைக்கப்பட்டுவிட்டது.






விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்...





http://lawmin.nic.in/ncrwc/finalreport/v2b2-5.htm
http://www.assembly.tn.gov.in/history/history.htm



இது டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்திகளின் திறனுக்கான ஒரு சாம்பிள் :)))


ஊரறிந்த செய்தியே இவர்களிடம் இந்தப் பாடுபட்டு முழிக்கிறது. இதில் இவர்களின் யூகங்களின் அடிப்படையில் வெளியிடப்படும் செய்திகளின் நம்பகத்தன்மை எப்படியிருக்கும்...
புரியாதவர்கள் புரிந்து கொள்ளுங்கள்!!!

Labels: ,

« Home | Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »

6 Comments:

At 6:09 AM, Blogger கொழுவி said...

டைம்ஸ் ஆப் இந்தியாவா-- அடடே இது நம்ம மாலன் சார் மொழிபெயர்த்துப் போடுகிற பத்திரிகையாச்சே..

 
At 6:13 AM, Blogger அமிழ்து - Sathis M R said...

வருகைக்கு நன்றி கொழுவி!!!

ஆம், புரியாதவர்கள் புரிந்து கொள்ளவே ஒரு சாம்பிள் :))

 
At 7:24 AM, Anonymous Anonymous said...

டைம்ஸ் ஆப் இந்தியா பிரபல பத்திரிகை. உலகத்தின் மூன்றரையாவது முன்னணிப்பத்திரிகை. ஜூன் 30 -ந்தேதி 1991 -ம் வருடம் என்பதுதான் சரியாக இருக்கமுடியும். நடந்தது ஏனோ தவறான நாளிலே ஜனவரி 30 ந்தேதியிலே நடந்துவிட்டது. அதற்காக வரலாறு டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் மன்னிப்பு கேட்கின்றது

 
At 7:42 AM, Blogger அமிழ்து - Sathis M R said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அனானி! :))) உங்களின் பெயருடன் வெளியிட்டிருந்தால் மகிழ்ந்திருப்பேன்!

 
At 8:28 AM, Blogger முத்துகுமரன் said...

//டைம்ஸ் ஆப் இந்தியாவா-- அடடே இது நம்ம மாலன் சார் மொழிபெயர்த்துப் போடுகிற பத்திரிகையாச்சே..//

:-))))))

கொழுவி வ்விடாக்கண்டனா இருக்கீங்களே:-)

 
At 8:54 AM, Blogger அமிழ்து - Sathis M R said...

வருகைக்கு நன்றி, முத்துக்குமரன்!

 

Post a Comment