அமிழ்து: ஈழம் - கண்ணீர் அஞ்சலி!ஈழம் - கண்ணீர் அஞ்சலி!கொத்து கொத்தாய் மனித இனம் செத்துக் கிடக்குது அங்கே
ஓட்டுக்காய் ஆளாய் பறக்குது அரசியல் கூட்டம் இங்கே

அரிய வகை மிருகம் பார்க்க துறை இருக்காம் எங்கும்
ஆதி குடி தமிழனைக் கேட்கக் கூட நாதியில்லையே இங்கும்

என்னினத்தை அழிக்க என் வரியா உனக்கு - அதை
எதிர்த்து நின்றால் தேசியப் பாதுகாப்புச் சட்டமே எனக்கு

இசுலாமியராய் இருந்திருந்தால் - பத்தாண்டுகளிலாவது
ஈழம் வாங்கியிருப்போம்

யூதனாய் பிறந்திருந்தால் - என்றாவது ஒரு நாள்
நாடு கண்டுவிடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்திருப்போம்

தமிழனாய் பிறந்ததினால் - கவிதை மட்டுமே எழுதி
நமது உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறோம்!

Labels: , ,

« Home | Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »

2 Comments:

At 11:04 AM, Blogger Senthil Kumar said...

Vaethanai, kavaliyaga irukku da. romba unarchi poorvamaga irukku da...

 
At 3:13 AM, Anonymous Subha said...

தமிழனாய் பிறந்ததினால் - கவிதை மட்டுமே எழுதி
நமது உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறோம்!

100% true.

 

Post a Comment