நானும் வீடு பார்க்கும் படலமும்!
Friday, March 31, 2006
பெங்களூரில் சராசரியாக மூன்று மாதத்திற்க்கு ஒரு வீடு மாற்றி கொண்டு இருக்கும் எனக்கு, பொழுது போக வில்லையென்றால் வீடு மாறி விடுவதாக நண்பர்கள் மத்தியில் நமக்கு ஒரு நல்ல பெயர் உண்டு.
வீடு பார்ப்பது என்று முடிவு செய்தவுடன், உடனே, சில பல தெருக்கள், சுற்றி விட்டு, முடியாமல் பிறகு புரோக்கருக்கு கால் பண்ணிட வேண்டியது தான்.... (வீட்டு புரோக்கருக்கு தாங்க...)
புரோக்கர் என்றவுடன், நாம் இங்கு நிறைய சொல்ல வேண்டி இருக்கிறது. புரோக்கரை நாம் எப்படி வேண்டுமானலும் பார்த்திருந்திருக்கலாம். ஏதாவது ஒரு சாகரில் நம்மருகில் நின்று சாப்பிட்டுகொண்டு இருந்திருப்பார். ஆனால் நமக்கு தெரியாது, பின்னொரு நாளில், வீடு தேவை என்கிற அத்தியாவசியம் ஏற்படும் போது, Fரேஆட்ச் இலொ, ஆட்Mஅக் இலொ ஒரு சின்ன கட்டத்திற்க்குள் ஒளிந்திருப்பார். நாமும் ஏதொ ஒரு நில கிழாருடைய நம்பர் (அதாங்க ளான்ட் ளொர்ட்...!)என்று கால் பண்ணி விஷ்யத்தை கேட்கும் போது தான் தெரியும் அவர் ஒரு புரோக்கர் என்பது. சரி பரவாயில்லை என்று, பரஸ்பரம் அங்க அடையளங்களைப் பரிமாறிக் கொண்ட பிறகு, ஒரு இடதில் சந்திக்க முடிவு செய்வோம்.
இந்த இடத்தில் இன்னொரு முக்கியமான விஷயம், புரோக்கர் என்றவுடன், ஏதொ எளிய உடையுடன், கையில் ஒரு பேக்-உடனும், நடந்து வருவார் என்று எதிர்ப்பார்த்து கண் எல்லாம் பூத்து போன வேலையில், ஒரு பல்சரிலோ இல்லை யூனிகர்னிலோ ஒருவர் வந்திறங்குவார். நிகெ ஷூவும், அடிடச் ட்-ஷர்ட், லிவெ-இன் ஜீன்ஸுமாக தான் வருவார்.
னாம் சொன்ன அங்க அடையளங்களை உள் வாங்கியுள்ள அவர், நம்மிடம் சரியக வந்து விடுவார்.
பிறகு தான் வேலையே தொடங்கும்... அவரும் நமது cஒன்fஇகுரடிஒந்கு தகுந்தவாறு, சில பல வீடுகளை காண்பிப்பார். ஒவ்வொரு முறையும், நமது முகத்தை பார்ப்பார், ஏதாவது சந்தோச ரேகை தெரிகிறதா என்று, ணாமும் விட பிடியாக, பிடிக்கவில்லை என்று கூறிக்கொண்டு இருப்போம்.
ணமது, தீவிரமான மறுப்பை கண்டு சலித்தவராய், சில வார்த்தைகள் உதிர்ப்பார். கொஞ்சம் வாடகை கூட குடுத்தா நல்ல வீடு கிடைகும்...இந்த ஏரியா கொஞ்சம் காஸ்ட்லி, வேற ஒரு ஏரியால சூப்பர் வீடு இருக்கு என்ற தொணியில் வார்த்தைகள் வந்து விழும்...
சூப்பர் வீடு என்றவுடன் நமக்கும் அதை பார்த்தால் தான் என்ன என்று எண்ணம் தோன்றும். பின்னர் சில கிலோமீட்டர்கள், தள்ளி நம்மை அழைத்து சென்று வீட்டை காட்டுவார். வீடு நன்றாக தான் இருக்கும். ஆனல், அது இருக்கும் இடம் தான் நம்மை கொஞ்சம் பயமுருத்தும். தினமும் ஆfஏஷ் போய் வீடு திரும்புவது என்பது ஒரு சகாசமாகவே பிறகு அமைந்து விடும்.
இப்பொழுது அவர் குரல் சற்று உயரும். இந்த இடத்தில தான் சார் நீங்க சொல்ற வாடகைக்கு வீடு கிடைக்கும் எனபார். ணமகும் இப்பொழுது தான் தோண்றும், இங்கு வந்து இவ்வளவு தூரத்தில் இருப்பதற்க்கு, பேசாமல் பழைய வீட்டில்யே இருந்து விடலாம் என்று தோன்றும். ஆனால், இதெல்லாம் சில வினாடிகளுக்கு தான். பின்னர் பழையபடி முருங்க மரம் தான்.
அடுத்த ப்ரோக்கரைப் பார்க்கவேண்டியது தான்.