இந்தியாவிற்கு முக்கியம் கொலையாளியா, கொல்லப்பட்டவனா?
Tuesday, February 23, 2010
தலிபானால் கொல்லப்பட்ட பாகிஸ்தான் சீக்கியர்களுக்கு எனது இரங்கல்கள்.
இரண்டு பாகிஸ்தான் சீக்கியர்கள் பாகிஸ்தானில் தலிபானால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. இதற்காக ஒட்டு மொத்த இந்தியாவும் கண்டிக்கிறது. வெளியுறவுத் துறை மந்திரி, செயலாளரிருந்து எதிர்க் கட்சி பி.ஜே.பி வரை. நல்ல விஷயம் தான்.
ஆனால் கவனிக்கப்பட வேண்டிய அரசியல்...?
மனிதாபிமான அடிப்படையிலா? அப்படியெனில் பல மாதங்களாக ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்களே, அப்போது எங்கே போயிருந்தது?
இது பாகிஸ்தானின் உள்நாட்டு அரசியல் அல்லவா? இதைக் கண்டிக்க முடிகிறதென்றால், தமிழர்கள் கொல்லப்பட்டபோது மட்டும் அது இலங்கையின் உள்நாட்டு பிரச்சினை ஆனதோ?
சரி, இங்கும் சீக்கிய இனம் இருக்கிறது அதற்காக குரல் கொடுத்தோம் என்றால், இந்தியக் குடியரசில் தமிழர்கள் என்ற இனம் இருப்பதே மத்திய அரசுக்கு மறந்து விட்டதா? இப்பொழுது சீக்கிய சங்கங்கள் போர்க்கொடி தூக்கியதனால் தான் என்றால் தமிழர்கள் நடத்திய போராட்டங்கள் எல்லாம் மத்திய அரசுக்கு துச்சமா?
அதுவும் இல்லை ஈழத்தமிழர்கள் இராஜீவ் காந்தியின் கொலைப் பழிக்கு ஆளாகியிருக்கிறார்களே அதனாலா? அப்படியென்றால, இராஜீவ் காந்தியின் அம்மையார் இந்திராவைக் கொன்றவர்கள் சீக்கியர்கள் அல்லவா? அது மட்டும் மன்னிக்கப்பட்டு விட்டதா காங்கிரசால்?
அட போங்கையா, கொன்னது தலிபான், அரசாங்கம் இல்லைல?! அரசாங்கமென்றால் நாங்க வாய மூடிக் கொண்டிருந்திருப்போம், இறையாண்மையைக் காக்கும் விதமாக... மற்றபடி எவன் செத்தாலும் கவலையில்லை, யாரால் சாகடிக்கப்பட்டாங்கறது தான் முக்கியம்!
நல்ல அரசியல்!