அன்ன தானம் யாருக்கு?!!!
Monday, February 20, 2006
கடந்த சனிக்கிழமை மாலை, ஒரு கோவிலுக்கு சென்று இருந்தேன்.
வழக்கம் போல கூட்டம் அலை மோதியது. வட இந்தியரைப் போல இருந்த ஒரு பெரியவரும், அவரது மனைவி போல இருந்தவரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வெண் பொங்கல் வழங்கிக் கொண்டு இருந்தார்கள்.
சிறுவர், சிறுமியர் முண்டி அடித்து கொண்டு இருந்தார்கள், பெரியவர்களும் கூட.
இதில், கோவிலுக்கு பக்கத்தில் இருக்கும் சிறு குழந்தைகளும் பிரசாதம் வாங்க ஓடி வந்தன. அவர்களுக்கு இந்த பிரசாதம் இரவு உணவாகாவே பயன்படும் என்பது, அவர்கள் அணிந்திருந்த உடைகளிலும், பிரசாதம் வாங்க அவர்கள் செய்த பகீரத பிரயத்தனமுமே புலப்படுத்தியது.
ஆனால், அந்த வயது முதிர்ந்த கனவான் ஒரு தடவைக்கு மேலே வரக்கூடது என்று சொல்லி விரட்டி விட்டார். நல்ல வேலையாக ஒரு தடவை அனுமதித்தார்!!!
அதை பார்த்தபோது எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. பிரசாதமோ இல்லை அன்னதானமோ கொடுப்பது இல்லதவர்களுக்கு தானே தரப்பட வேண்டியது, அவர்கள் ஏன் தவிர்க்கப் படுகிறார்கள்!